A Promised Land

30 ஜனவரி 2011

உண்மையில் பாக்கு நீரிணையில் என்னதான் நடக்கிறது?

சமூக இணையமான பேஸ்புக்கில் தற்போதைய பிரச்சனையான மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக நான் இட்ட கருத்துரையும் அதற்கு என்னுடைய நண்பர்கள் வழங்கிய பதில்களையும் உங்களுக்கு தருகிறேன்

18 ஜனவரி 2011

வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் கிழக்கு எதிர்கொள்ளப்போகும் சவால்கள்...

அண்மையில் கிழக்குமாகாணம் பாரியதொரு வெள்ள அனர்த்தத்தை சந்திருந்தது. இன்னமும் பல பிரதேசங்களில் 2 அடிக்கும் அதிகமான நீர் தேங்கிநிற்கின்றது. இதனால் அவ்வப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி பாடசாலைகளிலும் ஏனைய இடங்களிலும் தங்கியிருப்பவர்கள் தொடர்ந்தும் தமது வீடுகளுக்கு திரும்பமுடியாதிருக்கின்றனர். பல கிராமங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வெள்ளஅனர்த்தம் கிழக்கு மக்களை இருவகையில் பாதித்திருக்கின்றது அதாவது ஒன்று வெள்ளம் ஏற்பட்டபோது சந்தித்த பாதிப்புக்கள் இரண்டாவது வெள்ளத்திற்கு பின்னர் அம்மக்கள் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புக்கள்.
வெள்ளம் ஏற்பட்டபோது சந்தித்த பிரச்சனைகளை ஓரளவுக்கு சிறப்பானமுறையிலே அங்குள்ள அரசாங்கபிரிவும் தொண்டர் அமைப்புக்களும் எதிர்கொண்டிருந்தன. இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதிலிருந்து அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் போன்றவை வழங்கி அவை ஓரளவுக்கு சிறப்பாக செயற்பட்டன என்றுதான் கூறலாம் ஆனால் அனர்த்தத்திற்கு பின்ன் அம்மக்கள் சந்திக்க இருப்பவைதான் முக்கியமானதாகும். இதில் அம்மக்களுடைய ஜீவனோபாயம், கல்வி சுகாதாரம் போன்றவை மிகமுக்கியமாக இருக்கப்போகின்றது. 

இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடுதலாக விவசாயத்தினை ஜீவனோபாயமாக கொண்டவர்கள் அத்தோடு மீன்பிடி, கால்நடைவளர்ப்பு, சுயதொழில்கள் என்பனவும் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொங்கலோடு வெள்ளாமையினையும் அறுவடையையும் செய்வோம் என்று காத்திருந்த மக்களுக்கு இவ்வனர்த்தம் மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் வீடுதிரும்பியதும் தங்களுடைய நாளாந்த வாழ்க்கையினை கொண்டுசெல்வதற்கு மிகவும் சிரமங்களை சந்திக்கப்போகின்றார்கள். ஏனென்றால் அம்மக்கள் தங்களுடைய ஜீவனோபாயதொழில்களை நம்பி அன்றன்றாடம வாழ்ந்துகொண்டிருந்த மக்கள். இதனால் இன்னும் ஒரு மூன்றுமாதங்களுக்கு அம்மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படபோகின்றார்கள்.

பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்படும்போது அது அப்பிரதேசங்களில் கல்விநிலையில் அது பாரிய தாங்கங்களையும் ஏற்படுத்தும். பாடசாலை சிறார்களினுடைய புத்தகங்கள் சீருடைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. புதிதாக புத்தகங்கள் அப்பியாசக்கொப்பகளை வாங்கிகொடுப்பதற்கு பெற்றோரிடம் பணமில்லை ஆகவே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமுடியாதநிலைதான் பெற்றோருக்கு ஏற்படும் இதன்காரணமாக பிள்ளைகளில் கல்வி ஆர்வம் குறைவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. "பிள்ளைகளின்ட கொப்பிபுத்தகங்கள் எல்லாம் வெள்ளத்தில அடிப்ட்டு போயிட்டுது இனி யுனிசெவ் ஆக்களிட்டத்தான் ஏதாவது கேட்கவேணும்" என்று ஒரு பாடசாலை அதிபருடன் கதைத்தபோது கூறினார். சடுதியான கல்வி வீழ்ச்சியினை தடுப்பதற்காகவே உடனடியாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாக கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். சில பாடசாலைகளில் இரண்டு மூன்று கட்டடங்களை இடம்பெயர்ந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு ஏனைய கட்டடங்களில் பாடசாலையை நடாத்துகின்ற நிலமைதான் தற்போது கிழக்கு மாகாணத்தின் இருக்கின்றது. ஆனாலும் எத்தனை பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வருவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இதேவேளை தேங்கிநிற்கின்ற நீரினுள் கால்நடைகள் இறந்து மிதப்பதினால் நீர் மாசுபட்டு காணப்படுகின்றது பாரிய சுகாதாக பிரச்சனைகளுக்கு அம்மக்கள் முகம்கொடுக்கவேண்டிய நிலைகாணப்படுகின்றது. பலருக்கு கால்களில் புண்கள்கூட ஏற்பட்டிருக்கின்றது
காலில் புண்ஏற்பட்டிருக்கிறது

உற்பத்தி துறையிலே ஐந்தாவது இடத்திலிருந்த கிழக்குமாகாணம் சடுதியாகவீழ்ச்சியினை சந்திக்கப்போகின்றது. பல கட்டுமானப்பணிகள் முற்றாக சேதமாகியிருக்கின்றன. இந்தநேரத்தில்தான் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவை அப்பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையினை கட்டியெழுப்புவதற்கு அரசா சாற்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியமானதாக இருக்கின்றது. ஆனால் ஏற்கனவே அரசு பல அரசசார்பற்ற நிறுவனங்களுடன் முரண்பட்டு அவற்றை நாட்டைவிட்டே வெளியேற்றியிருக்கின்றது இந்த நிலையில் இங்கு எஞ்சியிருக்கும் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒரேநேரத்தில் பாதிக்கப்பட்ட எல்லாமக்களுக்கும் உரிய தேவைகளை நிவர்த்திசெய்யமுடியாது என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையை கல்வியை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எல்லோருடைய அவா... 


12 ஜனவரி 2011

பதிவர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்

கிழக்குமாகாணத்தில் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக பதிவர்கள் ஒன்று சேர்ந்து உலர் உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய இதர பொருட்களை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம். தற்போதும் கிழக்கு மாகாணத்திலே தொடர்ந்து மழைபெய்து கொண்டிருக்கிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அனேகமாக மக்கள் அனைவரும் முகாம்களிலேயே தஞ்சமடைந்து இருக்கின்றார்கள் என அறியக்கிடைத்தோம். அவர்களுக்கு போதிய உணவுகள் இல்லை, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லை. ஆகவே நாம் எம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதையும் விரைவாகவே செய்வோம்

உங்களால் முடிந்த பொருட்களைத் திரட்டி, இலக்கம் 16, லில்லி அவென்யு, வெள்ளவத்தையில் உள்ள உலக சமுதாய சேவா சங்கத்தின் அலுவலகத்தில் காலை 6.00 மணிமுதல் 12.30 வரையும், மாலை 3.00 மணிமுதல் 7.30 மணிவரையும் உங்களது பொருட்களைக் கையளியுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களால் முடியுமானவரை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் கேளுங்கள்.

மட்டக்களப்பில் இருந்து தொடர்ந்து பதிவர் ரமேசும், சந்ருவும் எம்முடன் தொடர்பில் உள்ளனர். எனவே, எம்மால் முடிந்த உதவிகளை இப்போதே செய்வோம். யாழ்ப்பாத்தில் உள்ளவர்கள் பதிவர் கிருத்திகனை தொடர்புகொள்ளவும். 

அத்துடன் இலங்கையிலுள்ள தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு தேவையான பொருட்களை சேரித்துக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களிடமும் உதவிகளை பொருட்களை கையளிக்க முடியும் உங்களுக்கு அருகில் உள்ள சேரிப்பு நிலையத்தில் உங்கள் பொருட்களை கையளிக்கலாம்


  • வெற்றி எப் எம் -கையளிக்கக் கூடிய இடங்கள்.. 


       1. கொழும்பு ஹவலொக் டவுன்
       மயூராபதி அம்மன் கோவில்

      2. IDM CITY CAMPUS 3
      இல.16,42வது ஒழுங்கை, வெள்ளவத்தை

     3. IDM CITY CAMPUS 3
     இல.79, பொன் ஜீன் வீதி, கொட்டாஞ்சேனை



  • சக்தி எப் எம் - 114310656 இந்த தொலைபேசி இலக்கதில் எந்தெந்த பிரதேசங்களில் பொருட்களை கையளிக்கமுடியும் என்கின்ற மேலதிக தகவல்களை பெறமுடியும்
நாம் எம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதையும் விரைவாகவே செய்வோம்     

11 ஜனவரி 2011

புதிசு புத்தம் புதிசு - தோட்டா மணியம்


வணக்கம் நண்பர்களே இது என்னுடைய புதிய ஒரு முயற்சி. என்னுடைய வலைப்பதிவில் இன்றுமுதல் "தோட்டா மணியம்" என்னும் புதியவர் அறிமுகமாகப்போகின்றார். இவர் உங்களுக்கு எங்களுடைய சமூகத்தில் நடக்கும் தான் சந்திக்கும் பலவிடயங்களை ஒலிவடிவில் சுட்டிக்காட்டப்போகின்றார்.  தோட்டா மணியம் அண்ணை இன்று என்ன சொல்லப்போகிறார் என்பதை கீழுள்ள ஒலிவடிவத்தில் கேளுங்கள்..

Get this widget | Track details | eSnips Social DNA

ஓகே என்ன எல்லாரும் அண்ணை என்ன சொன்னவர் என்று கேட்டீங்களோ வடிவா விளங்கிச்சோ மீண்டும் அடுத்த வாரமும் இன்னுமொரு விடயத்துடன் தோட்டா மணியம் அண்ணை உங்கள் எல்லோரையும் சந்திப்பார் இது தொடர்பான விமர்சனங்களையும் நீங்கள் முன்வைக்கலாம்.
நீங்களும் அவரிடம் எதைப்பற்றியாவது கேட்கவேண்டும் என்றால் பின்னூட்டத்தில் தாராளமாக கேட்கலாம் தோட்டா மணியம் அண்ணை உங்களுடைய கேள்விகளுக்கும் பதிலளிப்பார்....

08 ஜனவரி 2011

லசந்த விக்கிர(மாதித்தன்)துங்க

"2009 ஜனவரி 8ம் திகதி வியாழக்கிழமையன்று கொழும்பு களுபோவில வைத்தியசாலைக்கு ஆபத்தான நிலையில் லசந்த கொண்டுவரப்படுகின்றார். அவர் துப்பாக்கி சூடு மற்றும் ஒரு கூர்மையான ஆயுதத்தினால் குத்தப்பட்ட காயங்களினால் ஆபத்தான நிலையில் இருப்பதாக காணப்பட்டார். லசந்த தாக்குதலுக்கு இலக்கான செய்தி வேகமாக நாடெங்கிலும்
பரவ ஆரம்பத்தது. அதையடுத்து வைத்தியசாலை வளாகத்தில் குடும்ப அங்கத்தவர்கள் நண்பர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூட ஆரம்பித்தார்கள். பகல்பொழுதில் இத்தகைய தாக்குதல் திட்டமிட்ட அடிப்படையில மேற்கொள்ளப்பட்டமைகுறித்து மக்கள் மத்தியில்அதிர்ச்சியும் பீதியும் ஏற்பட்டது...மேலதிக வைத்திய உதவிகள் மற்றும் கொழும்பு பெரிய வைத்தியசாலையில் இருந்துமேலும் சத்திரசிகிற்சை நிபுணர்கள் வந்து லசந்த விக்கிரமதுங்கவுக்கு அவசர சிகிற்சைகளை பெற்றுக்கொடுத்தபோதிலும் அவர் அன்று பிற்பகல் உயிர்துறந்தார்"


இன்று லசந்த படுகொலைசெய்யப்பட்டு 2 வருடங்கள்ஆகிவிட்டது. பலருக்கு லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பேராச்சரியத்தை அளித்தபோதிலும் அவர்கள் இவ்வித ஆபத்து அவருக்கு ஏற்படும்என்று எதிர்பார்த்ததாகவும் கூறமுடியும். 1983ம் ஆண்டில் அவர் ஆரம்பித்த இந்த சண்டேலீடர் பத்திரிகை ஊழல் சம்பவங்களை பகிரங்கப்படுத்துதல் அதிகார துஷ்பிரயோகத்தை பற்றி எழுதுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டிவந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தஊழல் அதிகார துஷ்பிரயோக சம்பவங்களில் அரசியலும் அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சம்பந்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. லசந்த இதனை எதற்காக செய்கிறார் என்பதும் ஒரு கேள்விக்குறியாக இருந்தது. ஆயினும் அவர் தைரியமான எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு பத்திரிகையாளனாக விளங்கியதுடன் அரசாங்கத்திற்கு எதிராகக்கூடி சர்ச்சைக்குரிய விடயங்களில் சவால் விடும் அளவுக்கு தைரியசாலியாக இருந்தார். அவரது பத்திரிகை எப்போதும் ஒருவரின் பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் குறிக்கோள் வைத்து இவர் செய்திகளை வெளியிட்டார். இதன் காரணமாகவே அவர் கொலைசெய்யப்பட்டார் என்ற ரீதியில் ஊகங்கள் முன்பு வெளியாகியிருந்தது.

லசந்த கொலை செய்யப்படுவதற்கு முன்னரும் சண்டேலீடர் பத்திரிகை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 2007ல் லீடர் பத்திரிகை கூட்டுநிறுவனத்தின் அச்சகம் தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்ட பின்னர் அது தீக்கிரையாக்கப்பட்டது. 2006ல் லசந்த விக்கிரமதுங்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக வெளிவந்த ஒரு செய்தியில் ஜனாதிபதி அவர்களை கண்டித்து எழுதியமைகுறித்து அவர் கைது செய்யப்படுவார் என்ற அச்சுறுத்தலுக்கும் இலக்காகியமை குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைபேசி மிரட்டல்கள் போன்றவையும் லசந்தவின் பேனாவை முடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் துணிச்சல் மிக்க ஊடகவியலாளராக இருந்ததன் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது ஊடகபணியினை லசந்த செய்துகொண்டிருந்தார் இது பலருக்கு சகிக்கமுடியாமல் போனதே அவருடைய கொலைக்கு காரணமானது என்று கூறப்படுகின்றது
இன்று லசந்த கொலைசெய்யப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது குற்றவாளிகள் / கொலையாளிகள் இனம்தெரியாத ஆயுததாரிகள் என்னும் பெயரில் இன்னும் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.