A Promised Land

லசந்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லசந்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜனவரி 2011

லசந்த விக்கிர(மாதித்தன்)துங்க

"2009 ஜனவரி 8ம் திகதி வியாழக்கிழமையன்று கொழும்பு களுபோவில வைத்தியசாலைக்கு ஆபத்தான நிலையில் லசந்த கொண்டுவரப்படுகின்றார். அவர் துப்பாக்கி சூடு மற்றும் ஒரு கூர்மையான ஆயுதத்தினால் குத்தப்பட்ட காயங்களினால் ஆபத்தான நிலையில் இருப்பதாக காணப்பட்டார். லசந்த தாக்குதலுக்கு இலக்கான செய்தி வேகமாக நாடெங்கிலும்
பரவ ஆரம்பத்தது. அதையடுத்து வைத்தியசாலை வளாகத்தில் குடும்ப அங்கத்தவர்கள் நண்பர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூட ஆரம்பித்தார்கள். பகல்பொழுதில் இத்தகைய தாக்குதல் திட்டமிட்ட அடிப்படையில மேற்கொள்ளப்பட்டமைகுறித்து மக்கள் மத்தியில்அதிர்ச்சியும் பீதியும் ஏற்பட்டது...மேலதிக வைத்திய உதவிகள் மற்றும் கொழும்பு பெரிய வைத்தியசாலையில் இருந்துமேலும் சத்திரசிகிற்சை நிபுணர்கள் வந்து லசந்த விக்கிரமதுங்கவுக்கு அவசர சிகிற்சைகளை பெற்றுக்கொடுத்தபோதிலும் அவர் அன்று பிற்பகல் உயிர்துறந்தார்"


இன்று லசந்த படுகொலைசெய்யப்பட்டு 2 வருடங்கள்ஆகிவிட்டது. பலருக்கு லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பேராச்சரியத்தை அளித்தபோதிலும் அவர்கள் இவ்வித ஆபத்து அவருக்கு ஏற்படும்என்று எதிர்பார்த்ததாகவும் கூறமுடியும். 1983ம் ஆண்டில் அவர் ஆரம்பித்த இந்த சண்டேலீடர் பத்திரிகை ஊழல் சம்பவங்களை பகிரங்கப்படுத்துதல் அதிகார துஷ்பிரயோகத்தை பற்றி எழுதுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டிவந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தஊழல் அதிகார துஷ்பிரயோக சம்பவங்களில் அரசியலும் அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சம்பந்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. லசந்த இதனை எதற்காக செய்கிறார் என்பதும் ஒரு கேள்விக்குறியாக இருந்தது. ஆயினும் அவர் தைரியமான எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு பத்திரிகையாளனாக விளங்கியதுடன் அரசாங்கத்திற்கு எதிராகக்கூடி சர்ச்சைக்குரிய விடயங்களில் சவால் விடும் அளவுக்கு தைரியசாலியாக இருந்தார். அவரது பத்திரிகை எப்போதும் ஒருவரின் பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் குறிக்கோள் வைத்து இவர் செய்திகளை வெளியிட்டார். இதன் காரணமாகவே அவர் கொலைசெய்யப்பட்டார் என்ற ரீதியில் ஊகங்கள் முன்பு வெளியாகியிருந்தது.

லசந்த கொலை செய்யப்படுவதற்கு முன்னரும் சண்டேலீடர் பத்திரிகை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 2007ல் லீடர் பத்திரிகை கூட்டுநிறுவனத்தின் அச்சகம் தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்ட பின்னர் அது தீக்கிரையாக்கப்பட்டது. 2006ல் லசந்த விக்கிரமதுங்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக வெளிவந்த ஒரு செய்தியில் ஜனாதிபதி அவர்களை கண்டித்து எழுதியமைகுறித்து அவர் கைது செய்யப்படுவார் என்ற அச்சுறுத்தலுக்கும் இலக்காகியமை குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைபேசி மிரட்டல்கள் போன்றவையும் லசந்தவின் பேனாவை முடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் துணிச்சல் மிக்க ஊடகவியலாளராக இருந்ததன் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது ஊடகபணியினை லசந்த செய்துகொண்டிருந்தார் இது பலருக்கு சகிக்கமுடியாமல் போனதே அவருடைய கொலைக்கு காரணமானது என்று கூறப்படுகின்றது
இன்று லசந்த கொலைசெய்யப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது குற்றவாளிகள் / கொலையாளிகள் இனம்தெரியாத ஆயுததாரிகள் என்னும் பெயரில் இன்னும் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.