வதீஸ் - Vathees's Blog
A Promised Land
பாக்கு நீரிணை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
பாக்கு நீரிணை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
30 ஜனவரி 2011
உண்மையில் பாக்கு நீரிணையில் என்னதான் நடக்கிறது?
சமூக இணையமான பேஸ்புக்கில் தற்போதைய பிரச்சனையான மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக நான் இட்ட கருத்துரையும் அதற்கு என்னுடைய நண்பர்கள் வழங்கிய பதில்களையும் உங்களுக்கு தருகிறேன்
Vathees Varunan
#tnfisherman மீனவர்கள் தாக்கப்டுவது கண்டிக்கவேண்டியதுதான் அதேபோல அவர்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்காக குரல்கொடுக்க யாருமில்லை
9 hours ago
via
Seesmic Web
·
·
Like
·
Comment
Logeswaran Bakthavachalan
,
Tharugasini Manickavasagar
,
Kugathasan Abimaran
and
5 others
like this.
Gopikrishna Kanagalingam
அது முக்கியமானது. இப்போது எழுந்திருக்கும் ஆதரவு அலை மூலம் அவர்களது பிழைகள் மறைக்கப்படக் கூடாது.
9 hours ago
·
Unlike
·
3 people
Gopikrishna Kanagalingam
ஆனால் நான் கண்டவரை இலங்கை இராணுவத்தை எதிர்க்கிறோம் என் பார்வையில் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுக்கு எதிராக செய்தவை எதுவும் தமிழ் ஊடகங்களால் மக்ககளுக்கு கொண்டுசேர்க்கப்படவில்லை. மாறாக அவர்களது பிழைகள் நியாயப்படுத்தப்பட்டு அப்பாவி இலங்கை மீனவர்களின் பிரச்சினை மறைக்கப்பட்டது.
9 hours ago
·
Unlike
·
5 people
Vathees Varunan
உண்மைதான் கோபி பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்வார்கள் என்று நீங்கள் கருதுகின்றீர்களா ஒருபோதும் இல்லை மாறாக துரோகி பட்டம்தான் கட்டுவார்கள்
9 hours ago
·
Like
·
2 people
Vathees Varunan
#slfisherman
9 hours ago
·
Like
Vathees Varunan
தமிழ் ஊடகங்கள் இலங்கைமீனவர்களுடை பிரச்சனைகளை இருட்டடிப்பு செய்யதின் காரணமாகவே இந்திய தமிழர்களுக்கு பல விடயங்கள் தெரியமலே போய்விட்டது
8 hours ago
·
Like
Carthigan Gopalasingam
வதீஸ் கோபி கூறுவதை நானும் வழிமொழிகிறேன்!
8 hours ago
·
Unlike
·
1 person
Nirshan Ramanujam
"இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலைவிரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன" -
http://www.virakesari.lk/n
ews/head_view.asp?key_c=27
971
6 hours ago
·
Like
·
1 person
Ajanthan Ajan
இலங்கை மீனவர்களுக்கு இருக்கும் பிரச்சனை வருமானம், தொழில்.ஆனால் தமிழக மீனவர்களுக்கு இருக்கும் பிரச்சனை உயிர்.
இரண்டுக்கும் முதலில் வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள்.
கடல் எல்லை தாண்டினால் சுடலாம், சுடுவது எந்த நாட்டிலும் இல்லை.
முதலில் உயிர் பிர
ச்சனைக்கு தீர்வு காணபட்டால் அடுத்தது இலங்கை மீனவ பிரச்சனையும் இலகுவில் தீர்க்கலாம்.அதை செய்யவேண்டியது இரு அரசுகளும்.
அதைவிட்டு இரு அரசும் பொறுப்பற்ற வகையில் தட்டிகளிப்பதும், கொலைகளை இருட்டடிப்பது செய்வதும் பிரச்னைக்கு தீர்வு தராது.
இலங்கை மீனவ பிரச்சனை இலங்கை ஊடகங்கள் ஏன் சொல்லுவது இல்லை ? நான் ஏன்டா நிர்சன் எழுதியதை தவிர வேறு எங்கும் பார்க்க வில்லை.
பல ஆண்டு ஊடக பணியில் இருக்கும் உங்களை போன்றோரே அதை செய்வது இல்லை காரணம் உயிர் அச்சுறுத்தல்.இது இலங்கை திரு நாட்டில் இருக்கும் நிலைமை.
இலங்கை மீனவ பிரச்சனை தொடர்பான செய்தியை வெளியே கொண்டு வருவது இலங்கை அரசின் பொறுப்பு, இலங்கை ஊடகத்தின் பொறுப்பு.
அங்கே சாவதும் தமிழன், இங்கு வருமானம் இன்றி கஷ்ட படுவதும் தமிழன். அகவே வாய் முடி, நாங்கள் (இலங்கை அரசு) சுடவில்லை, இலங்கை மீனவ பிரச்சனைக்கு குழு அமைகிறோம் எண்டு எல்லாம் சொல்லி கொண்டு செல்ல வேண்டியது தான்.என்றாவது இலங்கை அரசு இந்திய அரசுடன் இலங்கை மீனவ பிரச்சனை தொடர்ப பேசியதாக செய்தி உண்ட ? இருக்காது.
தமிழக தமிழர்களும் தெரியும் இலங்கை மீனவ பிரச்சனைகள் தெரியும்.
தமிழக மீன்வகர்களுக்கு தெரியாது என்பது உங்கட அறியாமை காட்டுகிறது வை.
அவர்களும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தான்போராடுகிறார்கள்.தமிழக,
இந்திய அரசுக்கு, அழுத்தங்கள் கொடுகிறார்கள் அவர்கள் எந்த ஒரு ஆக்க பூர்வமான நடவடிக்கை, ஊடக தணிக்கை செய்ததாலே #tnfisherman என்று ட்விட்டர்'ல் பரப்புரை போராட்டத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதை விளங்கி கொள்ளுங்கோ.
5 hours ago
·
Like
Gopikrishna Kanagalingam
@நிர்ஷன் அண்ணா:
இலங்கை மீனவர்களுககு எத்தனை காலமாக இந்தப் பிரச்சினை இருக்கிறது?
இதுவரை எத்தனை முறை செய்திகளில் அந்தப்பிரச்சினைகள் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டிருக்க
ின்றன?
எங்களுக்குத் தேவையே இல்லாத "விஜய் அரசியலுக்கு வருவாரா?", "ராகுல் காந்த
ி தமிழகத்தில் என்ன செய்தார்", "விஜயகாந்த் நல்லவரா", நடிக நடிகையரின் அந்தரங்க விடயங்கள் பற்றிய செய்திகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் ஊடகங்களால் இலங்கை மீனவர் பிரச்சினைக்காக வழங்கப்பட்டதா?
இதுவரை எத்தனை ஞாயிற்றுக்கிழமைப் பத்திகள் அவர்களுக்காக எழுதப்பட்டிருக்கின்றன?
அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளைக் காட்டலாம், ஆனால் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பது வெளிப்படை.
செய்திகளைத் தொடர்ந்தும் தொடர்ந்துவரும் அனைவரையும் அழைத்து இலங்கை மீனவர் தொடர்பாக அவர்களுக்கு எவ்வளவு புரிதல் இருக்கிறது எனக் கேட்டுப்பார்த்தால் தெரியும் எவ்வளவு தூரம் அவர்களது பிரச்சினைகள் முக்கியத்துவப்படுத்தப்படவி
ல்லை என்று.
4 hours ago
·
Like
Gopikrishna Kanagalingam
@Ajanthan Ajan:
யாரும் தமிழக மீனவர் தொடர்பான தாக்குதல்களை நியாயப்படுத்தவில்லை.
ஆனால்,
// இலங்கை மீனவர்களுக்கு இருக்கும் பிரச்சனை வருமானம், தொழில். //
இது வெறுமனே மேல்நோக்குப் பார்வை.
ஏழை மீனவர்களிடமிருந்து மிகவும் பெறுமதியான அந்த வலைகளை அழிப்பதற்கும் அவர்களது உயிரை எடுப்பதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
என்னைப் பொறுத்தவரை மீனவர்கள் சுடப்படுவதற்கும், மீனவர்களால் மீனவர்களில் வலைகள் அறுக்கப்படுவதற்குமிடையில் எந்த வித்தியாசமும் கிடையாது.
// முதலில் உயிர் பிர...ச்சனைக்கு தீர்வு காணபட்டால் அடுத்தது இலங்கை மீனவ பிரச்சனையும் இலகுவில் தீர்க்கலாம் //
அதைவிட இலகுவான வழியை நான் சொல்வேன்.
இலங்கை மீனவர்களின் பிரச்சினை தீ்ர்க்கப்பட்டால் தமிழக மீனவர்களுக்குப் பிரச்சினையே இருக்காது.
கடல் எல்லையைத் தாண்டி வருவதை ஏன் இன்று போராட்டம் நடத்துபவர்களால் நிறுத்த முடியாது?
இன்னொரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்குமாறு நடக்க வேண்டாம் என ஏன் அவ் மீனவர்களை போராட்டக்காரர்களால் விளங்கப்படுத்த முடியாது?
// காரணம் உயிர் அச்சுறுத்தல். //
எத்தனை காலம் இப்படி அதைச்சொல்லிச் சொல்லியே காலத்தை ஓட்டுவது?
இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றன என்று சொல்வதற்காக இங்கு யாருமே வந்து யாரையும் கடத்தப்போவதுமில்லை, துன்புறுத்தப்போவதுமில்லை.
இது self-censorship என்று சொல்லப்படுகின்றன தங்களை தாங்களே மட்டுறுத்தி வைத்திருக்கின்ற நிலைமை.
4 hours ago
·
Like
Vathees Varunan
இங்கே மீண்டும் நான் கூறுகிறேன் மீனவர்கள் தாக்கப்படுவதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
நான் இதுதொடர்பாக விபரங்களை சேரித்தபோது கிடைத்த ஆச்சரியமான தகவல் என்னவெனில் இலங்கை கடற்படை தமிழ் பேசக்கூடிய ஒருவரை அழைத்துச்சென்று இந்தியமீனவர்களுக்கு தமிழி
லேயே இலங்கை கடல் எல்லையிலிருந்து போகும்படி தமிழிலயே 2 மணித்தியாலங்களுக்கு மேலாகவும் அறிவுறுத்துவதாகவும் ஆனால் தமிழக மீனவர்களோ அதை கண்டும் காணாததுபோல மீன்பிடிப்பதாகவும் இதன்காரணமாகவே வேறு வழியில்லாமல் அவர்கள்மீது தாக்குவதாகவும் இலங்கையின் வடபகுதி மீனவர்கள் தெரிவித்தார்கள். இதிலே என்னுடைய உறவினர்கள்பலரும் நேரடியாக இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்
கள்
இந்திய மீனவர்களை தங்களது எல்லையை தாண்டிவந்து மீன்பிடிக்ககூடாது என்று ஏன் தற்போது போராட்டம் நடத்துபவர்களால் கோரிக்கை விடக்கூடாது என்பதுதான் என்னுடை கோரிக்கை வெறுமனே ஒரு பக்கத்தின் கருத்துக்களை கேட்காமல் இருதரப்பினருடைய பிரச்சனைகளையும் கேட்டறிந்து புரிந்துணர்வுடன் செயற்பட்டால் எந்தப்பிரச்சனையும் இருக்காது
3 hours ago
·
Like
Mayooran Peri
தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்
3 hours ago
·
Like
·
1 person
Mayooran Peri
இவர்கள் வடபகுதிக் கடலிலுள்ள மீன்களை சூறையாடுவது பற்றி ஏன் எவரும் கதைக்கின்றார்கள் இல்லை.
இந்திய மீனவன் மன்னிக்கவும் தமிழக மீனவன் கொல்லப்படுவதை அவர்களது தலைவர் கருணாநிதியே கவனத்தில் எடுக்காதபோது நாம் ஏன் எடுக்கவேண்டும். உந்த தொப்புள் கொடி உற
வுகள் எல்லாம் எப்பவோ முறிந்து முடிந்துபோனது.
ஒரு குவாட்டருக்கும் புரியாணிப் பார்சலுக்கும் தங்கள் சுயத்தை விற்கும் தமிழகத் தமிழர்கள் பற்றி கவலைப்படுவது மடத்தனம்.
3 hours ago
·
Like
Ajanthan Ajan
கோபி நான் சொன்னதை நீங்கள் ஒருக்கா மீண்டும் வாசிங்கோ.
நான் நியாபடுத்தியதாக சொல்லவில்லை.
தம்பட்டம் அடிக்கும் இரு அரசுகளுக்கும் தமிழ் சனம் சாவில் பொருப்பற்ற வகையில் நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதையே சொல்லி இருக்கிறேன்.
ஆகா மொத்தம் இலங்கை மீனவர்களின் வலை தமிழக மீனவன் உயிருக்கு சாமம். நகைச்சுவையான பதில்.
எந்த ஒரு உள்நோக்கான பார்வையும் இறந்த மீனவர்களின் கொலைகள் தடுக்கப்படவும் இல்லை
இலங்கை மீனவர்களின் வலைகளை அறுக்கபடுவதும் தடுக்கப்படவில்லை.
இலங்கை மீனவர்களின் வலைகளை அறுப்பதுக்கு இலங்கை அரசு இந்திய அரசு ஊடக நடவடிக்கை எடுக்க வேணும்.அதே போல தமிழக மீனவ இலங்கை கடல் படைகளால் கொல்லபடுவதை இந்திய அரசு இலங்கை அரசு ஊடக நடவடிக்கை எடுக்க வேணும். இதையே நான் சொல்லி இருக்கிறேன்.
எப்படி சொல்லுரிங்க இலங்கை மீனவ பிரச்சனை தீர்க்கபட்டாள் தமிழக மீனவ பிரச்சனை இருக்காது எண்டு?ஐயா கோபி எல்லை தாண்டி வருவது ஒன்றும் பெரிய குற்றமா? அப்படியே வந்தாலும் அவர்கள் சுடுவதா ?ஏன் இலங்கை படைகளால் கைது செய்யலாமே. இன்று போராடும் சனம் இதையே அன்று தொடக்கம் சொல்லி வருகிறார்கள்.
இலங்கை மீனவ வலை அறுப்பதை தமிழக மீனவன் நிறுத்தினால் இலங்கை படை தமிழக மீனவனை சுடதாம்.
அப்படி அல்லவே இருக்கு இந்த கதை.
கடல் எல்லை தாண்டபடுவதை இன்று போராட்டம் நடத்துபவர்கள்.
உங்களை போன்று அறிவாளி இல்லை தானே அந்த பாவப்பட்ட மீனவர்கள் அதனால் அவருக்கு கடல் எல்லை சரியாய் தெரிந்து கொள்ள முடியவில்லை, இந்த எல்லை பிரச்னையை அந்த மீனவர்களுக்கு சரியை அடையாளம் காணும்படி செய்து கொடுப்பது இந்திய அரசின் நடவடிக்கை. இங்கு போராட்டம் நடப்பது இந்திய அரசை இந்த கொலைகளை, எல்லை தாண்டும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரவே அதை செய்து கொடுக்கும் படியும் தான் நடக்குறது.
அடுத்த நாட்டு மீனவர்களின் வலைகளை அறுக்க வேண்டாம் என்று சொல்ல சொல்லுரிங்க.
இது என்றாவது ஒரு சிலர் செய்யப்படும் வேலை. இதும் தண்டிக்க படவேண்டியது.
இதை இந்திய அரசின் ஊடக தமிழக மீனவர்களுக்கு சொல்லவேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு
அதை செய்தார்களா அவர்கள் ? இல்லை நீங்கள் தான் இலங்கை மீனவ பிரச்சனை தொடர்பாக உங்கட ஊடகத்தில் விவாதித்து, மக்களுக்கு ஒரு விளிப்புனரை செய்து இருக்றீங்க ?
இன்று பரப்புரை போராட்டத்தை பண்ணும் tnfisherman அந்த மீனவ சனத்துக்கு எல்லை தொடர்பான் வழிகாட்டலை செய்து இருக்கிறார்கள்
சரி அப்படி கடத்தபோவது இல்லை என்று சொல்லும் நீங்கள் உங்கட ஊடகத்தின் முலம் ஒரு விளிப்புனரை பண்ணுங்களேன்.செய்ய மாட்டிர்கள்.
நான் என்னை தானே மட்டுறுத்தி இருக்கவில்லை, ஜனநாயக நாட்டில் இருக்கும் நிலைமையை சொன்னான்.
இலங்கை அரசின் காட்டுமிராண்டி செயலை சொல்ல விரும்புகிறேன்.
இங்கு இரு நாட்டு மீனவர்களுக்கும் பிரச்சனை உண்டு.
இரண்டு பிரச்னையும் தீர்க்க பட வேண்டும் என்று சொலி இருக்கிறேன்.
நீங்கள் இரு நாட்டு மீனவர்கள் எண்டு சொல்லி இருக்கீங்க நான் தமிழர்கள் எண்டு சொல்ல விரும்புகிறேன்
சும்மா வாய் சொல்லுக் எப்படியும் சொல்லாம், ஆனால் இலங்கை அரசு தொடர்பாக எது பேசினாலும் அச்சுறுத்தல் இருப்பது உண்மையே.அதற்கு மீனவ கொலை மட்டும் விதி விளக்கு இல்லை
இலங்கை அரசுக்கு தம்பட்டம் அடிக்கும் எம் சனம் இருக்கும் வரை எந்த ஒரு தமிழ் சனம் கொலையும் நிக்கபோவது இல்லை.
2 hours ago
·
Like
Gopikrishna Kanagalingam
நான் சொன்னதை திரும்ப வாசியுங்கோ.
நான் சொன்னது "கடற்படை(?) மீனவன சுடுறதுக்கும், அதே மீனவன் இன்னொரு மீனவன்ர வயிற்றில அடிக்கிறதுக்கும்" வித்தியாசம் இல்லை எண்டு.
அந்த மீனவனுக்கு வலையின்ர முக்கியத்துவம், அவசியம் தெரிய வேணாமா?
இன்னொரு பகுதி மீனவனின்ர வாழ்வாதாரத்த பறிக்கிறதுக்கும், அவனின்ர உயிர எடுக்கிறதுக்கும் வித்தியாசம் இல்ல எண்டு நான் நிச்சயமாச் சொல்லுவன்.
மற்றது வதீஸ் அண்ணா இலங்கை மீனவர்கள் சிலரோட கதைச்சு தெரிவிச்ச கருத்துக்களின்ரபடி, தமிழ் மொழிமூல மொழிபெயர்ப்பாளர் ஒருவரின்ர உதவியுடன் இந்திய மீனவர்களுக்கு தமிழில் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் கொலைகளை நான் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவில்லை, அவற்றைக் கண்டிக்கிறேன்.
ஆனால் அந்தநேரத்தில், அவர்களின் பிழைகளை அவர்கள் திருத்திக் கொள்ளவும் வேண்டும். அதன்மூலம் ஏராளமான பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
about an hour ago
·
Unlike
·
2 people
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)