A Promised Land
10 செப்டம்பர் 2008
இராமாயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்
இராவணன் ஆய கலைகளின் நாயகன். அதிலும் பூதகனங்களுக்கேல்லாம் இருக்கும் பக்தியை விட மகேஸ்வரனின் மேல் இராவணுக்கு பக்தி அதிகம்.
அனுமன் நெஞ்சைபிளந்து தான் தனது உள்ளத்தில் சிதாஇராமன் இருப்பதை காண்பித்தார். ஆனால் தனது மூச்சில் கூட மகேஸ்வரன் வாசம் என்பதை வசிஸ்டரின் வஞ்சனையை எரித்ததில் இருந்தே காணலாம்.
சரி கதைக்கு வருவோம். பக்த பித்தனான இராவணனுக்கு ஏதாவது தரவேண்டும் என அன்னை மகேஸ்வரனிடம் கேட்க அவனுக்கேன்று ஒரு உலகம் தாருங்கள் என அன்னையின் வேண்டுகோள். மகேஸ்வரனின் மறுபதில் அவனுக்கேன்று ஒரு உலகம் தந்தால் எங்கும் சிவ சந்நிதானம் அமைத்து தனக்கேன்று இருக்க இடமின்றி சுற்றிவருவான் என்றதும், அன்னை புன்னகைத்து ஒரு திட்டத்தை கூறினார். இராவணனை அழைத்து மகேஸ்வரர் இராவனா நீதான் ஆயகலைகளிலும் அற்புதன் ஆயிற்றே உனது அன்னைக்கேன்று ஓர் உலகம் செய் என்றார்.
சிவனாரின் வேண்டுகோள் அல்லவா அதுவும் தனது அன்னைக்கு என ஒரு தாய்க்கு மகன் ஆற்றும் கடமை அத்தனையும் உருக்கொண்டு வந்து அமைத்து முடித்தான்.
முடிந்த உடன் அன்னையை அதைக்காண அழைக்க அதன் அழகைகண்டு வியந்து போனார்கள்.
திட்டப்படி மகேஸ்வரன் இராவணனிடன் இராவணா இவ்வளவு அழகான நகரை படைத்த உணக்கு என்ன வேண்டும் கேள் என்றார். அதற்கு இராவணனோ ஐயனே தாய் தந்தை இருக்கும் இக்கயிலையை விட்டு எங்கும் பிரியாவரம் வேண்டும் என கேட்க அதற்கு எம் இருப்பிடம் உனக்கு என்றும் உண்டு. அதே நேரத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடு நாங்கள் கொடுக்கும் எதையும் நீ மறுக்க கூடாது என்பது தான்.
உத்தரவிற்கு இணங்கி வாக்கு கொடுத்தான் இராவணன். இதோ இங்கு உன்னால் அன்னைக்கு படைக்கபட்ட நாடு உனக்காகுக உனக்கு தரவே அன்னையின் நாடகம் என மீன்டும் இராவணுக்கே அந்த நகரை தந்து உனது சந்ததில் இந்நகரில் இருந்து பெருகி உலகெங்கும் பரவி உன்னை போலவே பல கலைகளில் புகழ்பெற்று விளங்கட்டும் என ஆசீகள் தந்து இலங்கேஸ்வரன் என்ற பெயரும் இட்டு அனுப்ப.
இலங்கேஸ்வரனுக்கு அழகான பெண்குழந்தை பிறக்க இந்த பெண்குழந்தைக்கு அன்பை காட்டும் போது தனது அன்னைக்கு காட்டும் அன்பில் குறைவந்துவிடுமே என அஞ்சி அக்குழந்தையை பூமாதேவிக்கு வார்த்து விட்டார்.
பூமாதேவியும் அக்குழந்ததையை சனகனிடம்(இன்றைய நேபாளத்தின் அன்றைய இராஜா) சேர்க்க அங்கு வளர்ந்த குழந்தை இராமணனை மணமுடிக்க பிறகு புத்திரகண்டம் வந்த தயரதன் வாக்குபடி இராமன் வனம் செல்ல தனது குழந்தை காட்டில் மழையிலும் குளிரிலும் வாடுகிறதே என்ற ஏக்கத்தில் இலங்கை கொண்டு செல்கிறான்.
இந்த நிகழ்ச்சிதான் வில்லன் யாரை போடுவோம் என நினைத்த வால்மிகிக்கு கிடைத்தான் இலங்கேஸ்வரன் பாவம். தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவையே கொடூரபடுத்தி விட்டான்.
இந்த செயலால் தான் வால்மிகி தனது வாழ்வின் கடைசி நாட்களில் குஸ்ட ரோகம் வந்து இறந்தான் என புரானங்கள் சொல்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
சிறப்பாக இருந்தது ஆக்கம். இதே கருத்தை நானும் அறிந்ததுண்டு. நம்பகத்தன்மை அற்றது. புராணங்களையும் புனைகதைகளையும் துறந்து பார்த்தால் இலங்கை வேந்தன் தென்னாடு,வடநாடு எல்லாம் வென்று கயிலை சென்று சிவனை வணங்கி இலிங்கம் கொண்டு வந்துள்ளான். தரைவழிவில் வந்தான் என்றால் அவமானம் என்று வருந்திய வடக்கு இராவணனிடம் புஸ்பகவிமானம் இருந்ததாய் ஒரு புழுடா விட்டது. அவ்வளவே.
தோல்வியால் துவண்ட வடக்கு படையெடுத்து வந்தது. தென்னாடு உதவியது வடக்குக்கு.(அஞ்சனேயர்,சுக்ரீவன் கூட்டம்)இன்று கூட தமிழில் துரோகிகளுக்கு பஞ்சம் இல்லை. அன்றும் தான். இலங்கையில் இருந்த தமிழ் வேந்தன் தங்களிலும் சிறந்து விளங்கியது தென்னாட்டை அன்று வருத்தத்தில் உள்ளாக்கியிருந்துள்ளது.
விளைவு இராவணன் மடிந்தான். தமிழ் வீரன் மடியச் செய்யப்பட்டான்.
மன்னரை கடவுளாய் வழிபடும் பண்பாடு வடக்கு-தெற்கு பண்பாடுகளில் உண்டு. திராவிட மன்னனை அழித்த இராமன் எனும் மன்னன் கடவுளானான் ஆதலால்.
படையெடுப்புக்கு நீதி கற்பிக்க இடையிலே சீதை வந்துவிட்டாள் வால்மிகியிடம்.( சிலர் அன்றைய போர்க்கால தர்மப்படி தோற்ற மன்னனின் மனைவி வென்றவனுக்கு சொந்தமானது என்று இருந்தது என்பர். சுக்ரீவனின் மனைவி வாலிக்கு சொந்தமானதை நினைவில் கொள்க. குறிப்பு- இவர்கள் குரங்குகள் அல்லர். தமிழ் நாட்டுத் தமிழர்)
கம்பன் வைணவப் பற்றில் தன் தமிழை வடக்குக்கு விற்றான். தமிழில் இராமன் கலந்தான். இதுதான் இராமாயணம். இன்றுகூட கயிலை செல்வோர் இலிங்கம் கொண்டுவருவது வழமை.(மானேசுவரர் ஆற்றில் இருந்து)திருகோணமலையில் இராவணன் பிரதிட்டை செய்தது அப்படிக்கொண்டுவந்த இலிங்கமே.
வைணவம், சைவம்,இந்து போன்ற மேலதிக விளக்கத்திற்கு என்னுடைய வலைப்பூவிற்கு வருமாறு அழைக்கின்றேன் அன்போடு.
இராமாயணம் என்பது வடக்கர் கடவுளர், தென்னாடு குரங்குகள், இலங்கையர் அரக்கர் எனும் சூத்திரமே. தமிழ் நாட்டில் பெரியார் இராமாயணத்தை எதிர்த்தார். அத்தோடு கொழுத்தினார் என்றுகூட செவிவழியாக அறிந்ததுண்டு.
தங்களின் வலைப்பூ இலங்கை வலைப்பதிவர் திரட்டி, திரட்டி, தமிழ்மணம் என்பவற்றில் இல்லை என்று நினைக்கின்றேன். விண்ணப்பியுங்கள். நிச்சயம் தங்கள் வலைப்பூ இணைக்கப்படும். எனவே தங்கள் எழுத்தை பலர் வாசிக்கும் அனுகூலத்தை அடையலாம்.
வலைப்பூவில் நுணுக்கங்களை அறியவிரும்பின் தொடர்புகொள்க. நானும் அண்மையிலேயே வலைப்பூவில் இணைந்து கொண்டேன். எனினும் யான் அறிந்ததை அறியத்தரலாம்.
என்னோடு தொடர்பு கொள்ளவிரும்பின்:- sivathamiloan@yahoo.com
"மொழிப் பற்றும் நெறிப்பற்றும் இல்லா வாழ்வும் வாழ்வா"
நன்றி
அன்போடு சிவத்தமிழோன்
www.sivathamiloan.blogspot.com
மிகவும் நன்றி உங்களுடைய வலைப்பூவை படித்தேன். தமிழ் மொழி மீதும் அதனுடன் சார்ந்தவற்றின் மீதும் உங்களுக்கு உள்ள பற்றை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.மிக விரைவில் தமிழ் மணத்தில் நானும் இணைந்து கொள்வேன் என்பதையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.
கருத்துரையிடுக