A Promised Land

01 செப்டம்பர் 2008

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-6

பானை உடைத்தல்

விழாக்காலங்களில் நடைபெறும் இப்போட்டி விளையாட்டில் இரு மூங்கில் கம்புகள்
ஊன்றப்பட்டு இடையே கயிறு கட்டப்பட்டிருக்கும். கயிற்றின் நடுவே பானையொன்று
கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருக்கும். சற்றுத் துரம் தள்ளி எல்லைக்கோடு
வரையப் பட்டிருக்கும்.


கலந்து கொள்வோரெல்லாம் அவ்வெல்லைக் கோட்டில் நிற்க வேண்டும். ஒவ்வொருவர்
கையிலும் நீளமான கம்பு இருக்கும். கலந்து கொள்பவர் கண்ணையெல்லாம் ஒருவர்
துணியால் கட்டித் திசையினைக் கண்டுபிடிக்க முடியாதவாறு சுற்றி விடுவார். சுற்றி
விடுவதால் பானையிருக்கும் திசையைக் குறிப்பாக அறிய இயலாது. குறிப்பிட்ட
நேரத்திற்குள் பானை இருக்கும் திசை நோக்கிச் சென்று, கையிலுள்ள கம்பினால்
பானையினை யார் உடைக்கிறார்களோ அவர் போட்டியில் வென்றவராகக் கருதப்படுவார்.
வென்றவர்க்குக் கிராமப் பொதுப் பணத்திலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை: