1.வேலை கிடைக்கவில்லை என்பதற்காக எல்லா துறைகளிலும் மூக்கை நுழைக்ககதீர்கள்.எந்தத் துறையில் உங்களுக்கு ஆர்வம் அதிகமோ அந்தத் துறைகளில் உள்ள நிறுவனங்களில் மட்டுமே வேலையை தேடுங்கள்.
2.உங்களுக்கு பிடித்த அந்தத் துறையை பற்றி மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்
3.நீங்கள் வேலை தேடுபவராக இருந்தாலும் சரி, சின்ன வேலை பார்த்துக் கொண்டே நல்ல வேலை தேடுபவராக இருந்தாலும் சரி உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டே இருங்கள்.
4.நீங்கள் எந்தத் துறையில் வேலை தேடுகின்றீர்களோ அந்தத் துறையில் உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.ஏனென்றால் அவர்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் பற்றிய தகவல்கள் ஏராளமாக உங்களுக்கு கிடைக்கும்.
5.எந்தக் கட்டத்திலும் நம்பிக்கையை இழக்கதீர்கள்.ஒரு நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தாலும் துவண்டு போகாமல் அடுத்த முயற்சியில் இறங்குங்கள்.உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை வந்தால் தான் மற்றவர்களுக்கு நம்பிக்கை வரும்.
உங்களுக்கு பிடித்த வேலையை பெற மேலே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள் உங்களுக்கும் வெற்றி நிர்சயமாக கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக