இலங்கையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களுக்காக மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை (மே தினம்) மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்து மே மாதம் 7 ம் திகதியை விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் கையொப்பம் இட்டிருந்தார்.
இதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே தனது கருத்தினை பதிவு செய்துள்ளதோடு அவர்கள் தமது மே தின ஊர்வலங்களை மே மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப் போவாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதேபோன்றொரு நிலைமை இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னமும் ஏற்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெசாக் போயா தினமாக அமைந்ததால் அன்றை நாளில் மே தின ஊர்வலங்களை நடத்தாமல் மே மாதம் 2 ஆம் திகதி அவற்றை நடத்துவதற்கு அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தீர்மானித்தது.
இதற்கு அப்பேதிருந்த கட்சிகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் உடன்பட்டிருந்தன. ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியோ தாம் மே மாதம் முதலாம் திகதியே தமது மே தின ஊர்வலத்தை நடத்துவோம் என சபதமிட்டிருந்தனர்.
அதன்படி மே மாதம் முதலாம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து கொம்பனி வீதியில் அமைந்திருந்த டிமெல் மைதானத்தை நோக்கி சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஊர்வலம் நாடுமுழுவதிலுமிருந்த கலந்துகொண்டிருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பெரும்திரளான உறுப்பினர்களன் ஆதரவாளர்களுடன் ஆரம்பமாகியது.
ஆனாலும் அவர்களுடைய ஊர்வலம் ஆரம்பமாகி சிலநூறு மீட்டர்கள் செல்ல முன்னரே பொலிசாரின் சுற்றிவளைப்பு தாக்குதலுக்கு உள்ளாகியது. பொலிசாரின் அந்த தாக்குதலால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மே தின ஊர்வலம் கலைந்து போனது.
இந்த மே தின ஊர்வலத்த்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய இளம் உறுப்பினராக இருந்த தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் கலந்து கொண்டிருந்தார் என்பது விசேட அம்சமாகும். அவரும் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவாறு அடுத்தநாள் பொலன்னறுவை சென்று சேர்ந்ருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக