A Promised Land
29 டிசம்பர் 2008
இன்றைய சூழலில் தமிழ் இளையவர்களுக்கு உள்ள குறைபாடுகள்
நான் இலங்கையில் யா ரிவி எனும் தொலைக்காட்சியில் பணிபுரிகின்றபடியால் கடந்த இரு வாரங்களுக்குமுன் தமிழ் இளையவர்களை பற்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தோம்.
அதாவது இன்றைய சூழலில் தமிழ் இளையவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சனைகள் என்ன? இந்தப் பிரச்சனைகளைவிட இவர்களுக்குள்ள வாய்ப்புக்கள் என்ன? அரிதான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்ற இவர்கள் தங்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள எத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள் போன்ற பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றை ஒழுங்கு செய்தோம். முதலில் நாம் இசை எழுத்து வலைப்பதிவு போன்ற ஒவ்வொரு துறைகளில் இருந்தும் மூன்று இளையவர்களை இந்த கலந்துரையாடலில் நிகழ்ச்சியில் பங்குபற்றவைக்கவேண்டும் என முடிவு செய்தோம்.
இசைத்துறை சார்பாக இலங்கையில் கிருஷான் போன்ற பலரின் அல்பங்களுக்கு இசையமைத்துவரும் நோயல் ஆரோக்கியம் அவர்களையும் எழுத்துறை சார்பாக சஞ்சிகைகள் பலவற்றில் எழுதிவரும் பர்வீன் அவர்களையும் தொடர்புகொண்டு உறுதிசெய்தோம். பின்னர் வலைப்பதிவு சம்பந்தமாக ஒருவரை தேடினால் வலைப்பதிவு எழுதுபவர்கள் பலர் இலங்கைக்கு வெளியே இருந்து பதிபர்வர்களாக இருந்த காரணத்தினால் இலங்கை வலைப்பதிபவர் ஒருவரை தேடிப்பிடிப்பதென்பது மிகவும் சிரமமாக போய்விட்டது. சிலவலைப்பதிவாளர்களை அணுகியபோது தனிப்பட்ட காரணங்களுக்காக மறுப்பு தெரிவித்தார்கள். சில பேருடைய மின்னஞ்சல்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுமாறு மின்னஞ்சல்கள் பலவற்றையும் அனுப்பி பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக போய்விட்டது.
வெற்றி வானொலியின் முகாமையாளரும் நண்பருமான லோசன் அண்ணாவைத் தொடர்புகொண்டு என்னசெய்யலாம் என்றும் ஆலோசனைகளும் கேட்டாகிவிட்டது. இந்த நேரத்தில் வலைப்பதிபவர் ஒருவர் கிடைக்காவிட்டால் வேறு ஒரு துறையைச் சேர்ந்தவரை கலந்துரையாடலில் பங்குபற்ற வைப்பது என்ன மாற்று யோசனையும் என்னுள் இருந்தது. இதை என்னுடைய சிரேஷ்ர தயாரிபாளரிடமும் கூறி அனுமதியும் பெற்றாகிவிட்டது.
இவ்வாறு பலவழிகளிலும் சிந்தித்துகொண்டு இருந்தபோதுதான் நான் மின்னஞ்சல் அனுப்பியவர்களுள் ஒருவரான இராகலை கலை எனும் பெயரில் வலைப்பதியும் கலைக்குமார் அன்று மாலை என்னை தொடர்பு கொண்டார். அவருக்கு எங்களுடைய நிகழ்ச்சியைபற்றி விளக்கியவுடன் கலையும் அந்த நிகழ்வுக்கு சம்மதித்தார். ஏன் இவற்றை நான் கூறுகின்றேன் என்றால் கீழே அந்தக் கலந்துரையாடலின் பகுதிகளை தரவிருக்கிறேன்.
இவர்களோடு கலந்துரையாடுபவர் எங்களுடைய குழுவின் சிரேஷ்ர தயாரிப்பாளர் ரஜீத்
ரஜித்-
வணக்கம் இன்றைய காலந்துரையாடல் பகுதியில் நாம் காத்திரமான ஒரு விடயம்பற்றி கதைக்கவிருக்கிறோம்.அதுதான் எமது சமூகத்திலே தமிழ் இளையவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சனைகள் என்ன?, குறிப்பாக இந்தப் பிரச்சனைகளைவிட இவர்களுக்குள்ள வாய்ப்புக்கள் என்ன? அரிதான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்ற இவர்கள் தங்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள எத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள், போன்ற விடயங்களைப் பற்றி இன்றுநாம் கலந்துரையாடவிருக்கின்றோம். இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ள பாவீன் வந்திருக்கின்றார். இவர் எழுத்துத்துறையில் மிகவும் ஈடுபாடுடைய ஒருவர். அத்தோடு நோயல் ஆரோக்கியம் அவர்களும் வந்திருக்கின்றார். இவர் உண்மையாகவே இசைத்துறையில் ஈடுபாடும் பல படைப்புக்களை படைத்தவண்ணம் இருக்கின்றார். அடுத்து கலையும் எம்மோடு இணைந்துள்ளார். கலை குறிப்பாக வலைப்பதிவு அல்லது Blogwriting இதிலே மிகவும் பல படைப்புக்களை படைத்தவண்ணம் இருக்கின்ற ஒருவர்.
முதலாவதாக நாம் இலங்கை இளையவர்களின் தமிழ் இளையவர்களின் பிரச்சனைகள் குறித்து பேசுகின்ற போது இளையவர்களாக உங்களது முயற்சிகளில் ஈடுபடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் சூழல் தற்போது காணப்படுகின்றதா?
பர்வீன்-
என்னைப்பொறுத்தமட்டில் அது குறைவு. மிகமிகக்குறைவு. அரிதாகத்தான் இருக்கின்றது.பொதுவாக சுயமாக ஒருவர் ஆர்வம் இருந்தாலும்கூட எந்தத்துறையாக இருந்தாலும் அந்தவழிமுறை இன்னும் தெரியாமல்தான் இருக்கிறது. எப்படி எங்குசென்று உதாரணமாக எழுத்துத்துறை என்னுடைய துறையைபற்றி பேசுவதானால் யாரை சந்திப்பது, எப்படி நாங்கள் பன்முகத்தளங்களில் எமது ஆளுமைகளை வளர்த்துக்கொள்வது, யார்மூலமாக எமது எழுத்துத்துறையை அபிவிருத்தி செய்துகொள்ளலாம், இப்படியான பிரச்சனைகளை எமது இளையவர்கள் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இரண்டாவது அதற்கான உரியதளம் அவர்களது கற்பனைவளத்தை முதலீடு செய்யக்கூடிய ஒழுங்கானதளம் இன்னும் இலங்கையை பொறுத்தளவில் இல்லை என்கிற நிலைப்பாடு இருக்கிறது.
ரஜித்-
நோயல் உங்களிடம் கேட்கவிரும்புவது, இசைத்தறையிலே எவ்வாறு இத்தகைய அரிதான வாய்ப்புக்களும், அதற்கான உங்களுடைய முயற்சிகளும் திணறல்களும் எப்படியிருக்கின்றது?
நோயல்-
கடினமான ஒருவிடயம். நுழைவது என்பது லேசான ஒரு விடயமல்ல. இசைத்துறையென்பது பல வாய்ப்புக்கள் இருக்கு. இல்லையென்று சொல்லுறதுக்கில்லை. ஆனால் எல்லோருக்கும் தெரியாது. வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்துகிறது, அந்த வாய்ப்புக்கள் கிடைக்கிற இடத்தை எப்படி அணுகுகின்றது, போன்ற விடயங்கள் விசயங்கள் கனபேருக்கு தெரியிறது இல்லை.
ரஜித்-
இதற்கான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? குறிப்பாக தமிழ்த் துறையொன்றை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் இருக்கின்ற பிரச்சனைகள் என்ன?
நோயல்-
தமிழரென்று சொல்லேக்குள்ள முன்னுக்கு வரப்பயம். ஒன்டு என்னவென்றால் இத்தகைய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துகிறது என்றால், ஒன்றில் நாங்கள் மட்டகளப்பிலிருந்தோ, யாழ்ப்பாணத்திலிருந்தோ, நுவரெலியாவிலிருந்தோ, தமிழ் மக்கள் செறிவாக இருக்கிற இடங்களிலிருந்து இந்தமாதிரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்த முடியாது.
கொழும்புக்க வரவேணும். கொழும்புக்கு வந்தால் அதற்குள்ள ஆயிரத்தெட்டு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும். நானும் முகம் கொடுத்திருக்கின்றேன். அப்படியான நிலவரங்களை யோசித்து ஏன் சும்மா நிம்மதியாக வீட்டில இருக்கிறோம். சும்மா பாடுவோம் எண்டு போயிட்டு கொழும்பில இப்படி ஆயிரத்தெட்டுபேரின் கேள்வியைகேட்டு இந்தமாதிரி பிரச்சனைகள் எங்களுக்கு தேவையில்லையென்று சொல்லி அது ஒரு defiantly. ஒரு drawback தான்
ரஜித்-
இவ்வாறு நினைக்கின்ற அல்லது இவ்வாறான நிலமைகளுக்கு வருகின்ற தமிழ் இளையவர்கள்தான் அதிகம் அதிகமாக காணப்படுகின்றார்கள்.
நோயல்-
முடிவெண்டதைவிட அது நடக்குது.
ரஜித்-
ஆகவே அந்தநிலையை மாற்றியமைப்பதற்கு நீங்கள் எடுத்திருக்கும் முயற்சியைபற்றி கூறமுடியுமா?
நோயல்-
மாத்தியமைக்கிறது எண்டால் அந்த நிலவரம் இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
நான் பல்கலைக்கழகம் சென்று முடியும்வரைக்குள்ளும் அந்தபிரச்சனை இருந்துகொண்டிருந்தது. அந்த பல்கலைக்கழக அடையாள அட்டைதான் என்னை கனதரம் காப்பாற்றியிருக்குது.அற்றது அந்தவொரு சூழ்நிலைதான். பல்கலைகழகத்தில் போய்இருந்து அதாலகிடைத்த வலையமைப்பு, அதாலகிடைத்த பல தொடர்புகளை பயன்படுத்தித்தான் ஓரளவிற்கு இலங்கையிலுள்ள இசை, இலங்கையின் இசைக்கு இலக்கியமும் அந்த Fusion இலங்கையில் மடடுமன்றி மலேசியா இந்தியா வரைக்கும் எடுத்தசெல்லும் வாய்ப்பு கிடைத்தது.
ரஜித்-
கலை, உங்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது? குறிப்பாக இந்த இரண்டு துறைகளையும்விட இதுகொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கிறது. காரணம் என்னவென்று சொன்னால் இணையம் என்பது சர்வதேச ரீதியில் இலகுவாக யாரையும் நெருங்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதில உங்களது படைப்புக்களை கொண்டுபோறதில சாதகமான விசயங்களும், அதில நீங்க எடுக்கின்ற முயற்சிகளும் என்ன?
கலை-
அதாவது எமக்கு பாதகம் என்று கூட பேசமுடியாது. சாதகம் எண்டுசொல்லப்போனால் நமக்கு timeing கொஞ்சம் தேவை. உண்மையாக சொல்லப்போனால் நான் வேறுஒரு துறையில இருந்துகொண்டுதான் அதிலகிடைக்கிற கிடைக்கிற நேரத்திலதான் செய்துகொண்டு இருக்கிறேன். நமக்கு தேவையாக நெவ உழnநெஉவழைn உணடு இருக்கவேண்டும். அத்துடன் இணையத்துக்கு போறதுக்கு உழஅpரவநச ஒண்டும் இருந்தால்மட்டும் போதும். தமிழில ரைப்பண்ணி செய்யுறதுகூட முன்னம் மிகவும் கஸ்ரமாகத்தான் இருந்தது. நிறைய வழிமுறைகள் இருக்குது. அதுமட்டுமல்ல இந்த இரண்டுபேரினுடைய படைப்புக்களை அதனூடாக வெளியில எல்லாத்துக்கும் காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்குது.
ரஜித்-
இப்ப நாங்கள் உங்கள் மூன்றுபேருடனும் கதைத்ததில் இருந்து எனக்குதெரியிற விசியம் என்னவென்றால் தமிழ் இளையவர்களுக்கு வாய்ப்புக்கள் அரிதாக இருந்தாலும் அவங்கட முயற்சியின் காரணமாகத்தான் இத்தகைய ஒரு நிலையை தமிழ் இளையவர்கள் இலங்கையில் அடையலாம். அடையமுடியாது என்பதல்ல, அடையமுடியும் எனும்ஒரு நம்பிக்கை காணப்படுகின்றது. இத்தகைய ஒரு தளத்தை வைத்துக்கொண்டு அவ்வாறான ஒரு தளத்திலே தற்போது காணப்படுகின்ற சூழல், பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளம் தழிழ்மக்களுக்கு இருக்கின்றது. அவ்வாறான சூழலில் நீங்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் என்ன? இந்த மாதிரியான நீங்கள் முன்னெடுக்கின்ற வழியிலேயே பயணிக்க விரும்புகின்ற தமிழ் இளையவர்களுக்கு நீங்கள் உங்களுடைய துறையிலேயே என்ன கூறவிரும்புகிறிர்கள்?
பர்வீன்
எழுத்துத்துறையை பொறுத்தமட்டில் அதற்கு கடிமையான வாசிப்பு தேவை. ஆர்வம் இருந்தாலும் மட்டும் போதாது எழுத்துத்துறையை பொறுத்தமட்டிலே சுயதிருப்தி இருக்கக்கூடாது. அதாவது தான் எழுதுகின்ற அந்த எழுத்து நான் வாசித்து திருப்தி அடைந்துகொள்ளக்கூடிய மனப்பாங்குதான் இன்றைய இளையவர்களிடம் அதிகமாக இருக்கின்றது. இதுகூட இன்றைய இன்றைய இளையவர்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்ற காரணியாகும். இப்போது நீங்கள் கேட்ட அந்தக் கேள்விக்கு இணங்க இப்போது இருக்கின்ற பாதுகாப்பு கெடுபிடிகள் நாட்டு நிலவரம் இதையும் தாண்டி இளையவர்கள் எமுத்துத்துறையில் பரிணமிக்க வேண்டுமென்றால் பொதுவாக அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் அவலக்குரல்களை எடுத்துச்சொல்லவேண்டும். அதாவது இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பார். இந்த காலத்தில் நடந்த அவ்வளவு சம்பவத்தினையும் அனுபவித்ததையும் தான் அன்றாடம் காணுகின்றவற்றை தனது சுற்றத்தார் அனுபவித்தவற்றை தான் உணர்ந்து உள்வாங்கி அதை படைப்பிலக்கியமாக கொடுக்க முன்வரவேண்டும். இதுதான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த படைப்பாளியை உருவாக்குவதற்கு அத்திவாரமாக அமையும்.
ரஜித்-
ஆனால் பர்வின் நீங்கள் சொல்கின்ற இந்த நிலைமைக்கு தங்களுடைய படைப்புக்கள் இருந்தாலும். அதைக்வெளிக்கொண்டு வருகின்ற ஊடகம் இருக்கவேண்டும். ஊடகம் என்று சொல்லேக்குள்ள வழமையாக நாங்கள் பார்க்கின்ற ஊடகங்கள் மட்டுமல்ல புத்தகங்கலோ அல்லது மெகசின்கலோ பலவிதமான ஊடகங்கள் இருக்கு அவ்வாறான ஊடகங்கள் மிகவும் குறைவாகத்தானே பாணப்படுகின்றது. அதைப்பற்றி உங்களுடைய நோக்கம் என்னவாக இருக்கின்றது?
பர்வீன்
எழுத்துத்துறையை பொறுத்தவரையில் அரிதாக இருந்தாலும் எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது அந்தந்த பிரதேசங்களில் கவிதை இலக்கியம் எனும்போது கவிதைக்கான இதழ்கள் வருகின்றது. திருகோணமலையில் இருந்து நீங்களும் எழுதலாம் எனும் ஒரு கவிதை இதழ் வருகின்றது. அதேபோல் அனுராதபுரத்திலிருந்தும் இரண்டு இதழ்கள் வருகின்றது. ஆவ்வாறே தாயகம் என்று யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இதழ் வருகின்றது. இவைகளெல்லாம் அந்தந்த பிரதேசங்களை பிரதிநிதித்துவபடுத்துகின்றவர்களுக்கு ஒரு படைப்பு தளங்களாக பரிணமித்து கொண்டிருக்கின்றன.
ரஜித்-
உங்களிடம் கேட்க விரும்புவது இசைத்துறையில் எப்படி இருக்கிறது? பாடல்களென்று சொல்லேக்குள்ள பாடல் வரிகளும் இசையும் உணர்ச்சிபூர்வமாகவும் காத்திரமாகவும் சொல்லக்கூடிய ஒரு ஊடகமாக காணப்படுகின்றது.ஆகவே நாட்டில் இருக்கும் பிரச்சனை, யுத்தம் இவ்வாறான உருக்கமான விடயங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றதா?
நோயல்-
நிற்சயமாக நிற்சயமாக. இதுக்கு வழியமைத்தவரை பற்றி ஒரு வார்த்தை சொல்லாவிட்டால் அது சரியில்லை. ஏனெண்டால் இந்த இலங்கையிலுள்ள தமிழ் படைப்புக்களை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கொண்டுவாறதுக்கு அந்த ஒரு பாதையை வகுத்தது கிருஷான் மகேசன் எண்டுதான நான் சொல்லுவேன். இலங்கையில பல படைப்பாளிகள் இருக்கிறார்கள் இல்லையெண்டு சொல்லுறதுக்கில்லை. இருந்தாலும் அந்த தரத்தில இசையை கொண்டுவந்தது. இலங்கையாக இருக்கட்டும் தமிழர் செறிவாக வாழும் மூன்று பிரதேசங்களாக இருக்கட்டும் மலேசியாவாக இருக்கட்டும் சிங்கப்பூராக இருக்கட்டும் அங்க எல்லா இடத்திலேயும் கிருஷான் எண்டால் எல்லோருக்கும் தெரியும்.இலங்கையின் தமிழ் இலட்சினையெண்டால் அவர்தான். அவர் அப்படி தொடங்கியதும் அப்படியானதுதான். அந்த
J-Town எனும் பாடலில் இருக்கக்கூடிய பாடல்கள் வார்த்தைகள் அதால இண்டைக்கும் பார்த்தீர்கள் எண்டால் அந்த மாதிரி பாடல்கள் செய்யவேண்டும் எண்டுசொல்லி அந்த பாதச்சுவட்டில வருவதற்கு பார்க்குறார்கள். இப்பகூட நானும் கிருஷானும் நிறைய நீங்க சொன்னமாதிரி பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கிறோம். ஏன் இரவில வேலைசெய்திட்டு வெளியால சாப்பிட போகேக்க ஏன் இந்த நேரத்தில என்ன செய்கிறீங்க என்ற மாதிரி பிரச்சினைகள் நிறைய இருக்கு. அதையும்விட தமிழர்கள் என்ற விடயத்தினால் தற்பொழுது நிலவரம் எங்களுடைய படைப்புக்களை வெளியில கொண்டுவாறதுக்கான முதலீடுகளை செய்வதற்கு யாரும் முன்வாறது குறைவு. ஏனெண்டால் அவங்களுக்கு அதால கிடைக்ககூடிய விளம்பரங்களோ பிரதிபலன்களோ குறைவு. ஏனென்றால் நாங்கள் இப்படிசெய்கின்ற படைப்புக்கள் போய்சேருகின்ற சனத்தொகை மிகவும் குறைவாக இருக்கிறது.
ரஜித்-
ஆகவே தடைகளையும் தாண்டி பற்றோடு முன்னுக்கு வரவேண்டியநிலை காணப்படும். அவ்வாறான நிறைய இளையவர்கள் எமது சமூகத்திற்கு மிகவும்தேவை.
கலை ஒரு முக்கியமான விடயம்தான் இணையமானது பெருமளவு கண்காணிக்கப்படுகின்ற போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றது. ஆகவே இணையத்தில விசயங்களை சொல்கிறதிலையும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றது. ஆவ்வாறான விதத்தில இதுசம்மந்தமான விடயங்களை எவ்வாறு வெளிக்கொண்டு வருகின்றீர்கள்?
கலை-
அததான் இதுமாதிரியான நிறைய தளங்களுக்கு போனாலும்சரி இங்கு நடக்கின்ற பிரச்சினைகளையோசரி, பாதுகாப்பு சம்மந்தமான அவ்வளவு விடயங்களும் அவ்வளவு தளத்திலையும் கிடைக்கின்றது. ஆனால் கூடுமானவரை நான்வந்து அந்தமாதிரியான செய்திகளை தவிர்த்துக்கொண்டு வருகிறேன். அதாவது பாதுகாப்ப பிரச்சினைகள் என்றுகூட சொல்லலாம். அதாவது நான் வலைப்பதிவில் கொண்டுவர நினைக்கின்ற விடயங்கள் உதாரணத்திற்கு இவருடைய படைப்புகளை எடுத்துக்கொள்வோம். குறிப்பிட்ட ஒரு சஞ்சிகையொன்று குறிப்பிட்டவொரு பிரதேசத்திலிருந்துதான் வெளிவருகின்றது. அந்தப் பிரதேசத்தில் இருக்கிறவர்களுக்குதான் இதைப்பற்றி தெரியும். இணையங்களுக்குள்ள இன்றைக்குள்ள இளைய சமுதாயம் அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில அதைப் பார்த்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய படைப்புக்களை அவர்களுடைய முகவரியோட பரவலாக்குறதும் நோக்கமாக இருக்கின்றது. அது மாதிரி இப்ப செய்து கொண்டு வாறதுகூட பன்னீர்செல்வம் என்று எனது பாடசாலை வகுப்பாசிரியர் ஒருவருடைய அண்மையில வெளியிட்ட “சிலமுகங்களும் சிலமுகமூடிகளும்” என்கின்ற நூலிலுள்ள கவிதைகளை அப்படியே தொகுத்து அந்த வலைப்பதிவினூடாக நான் Update பண்ணிக்கொண்டு வருகிறேன்.
ரஜித்-
சரி தமிழ் இளையவர்கள் என்ற ரீதியில இலங்கைத் துறைகளில் எழுத்துத்துறையாக இருக்கலாம், இசைத்துறையாக இருக்கலாம், இணையத்துறையாக இருக்கலாம் பலதுறைகளில் தங்களுடைய முயற்சிகளை எடுத்தவருகின்ற உங்கள் மூன்றுபேருக்கும் இதேமாதிரி செயற்படுகின்ற அனைவருக்கும் தமிழ் மக்களின் பிரார்த்தனை நிச்சயமாக இருக்கும். உங்களுடைய சேவையை தொடர்ந்து செய்யுங்கள். இன்று கலந்துரையாடலுக்கு வந்தமைக்கு மிகவும் நன்றி.
www.yatv.net
www.youtube.com/yatvwebcast
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
மீண்டும் மீண்டும் நன்றிகள்
வதீஸ்வரன், உங்களுடைய ஆக்கவுணர்வு பாராட்டுக்குரியது.வழங்கப்பட்ட தலைப்பு இனியது.கலை-இராகலை நண்பர் கலந்துரையாடலில் பங்கேற்றமை மகிழ்வளிக்கிறது. பாராட்டுக்கள். "மெல்லத் தமிழினிச் சாகும்" என பாரதியின் காதுகளில் விழும்வகையில் உரைத்தவன் கலங்கவேண்டிய விடயமிது.
"தமிழே, என் காதல் தேனே; அழகான என் ஆருயிரே; நீ நீடூழி வாழ்வாய்"
"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே"
கருத்துரையிடுக