தமிழகத்தின் இந்த ஒட்டுமொத்தமான எழுச்சிகண்டு இந்திய மத்தியஅரசும் சற்று ஆடித்தான் போய்விட்டது என்றுகூறினால் அது மிகையாகாது. இதன்காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் சாட்டுக்கு பல நடவடிக்கைகளை(!!) மேற்கோண்டது.அவை ஆக்கபூர்வமானவைகளாக இல்லாவிட்டாலும் ஏனோதானோ என்று சில நடவடிக்கைகளை? மேற்கொண்டது.
இந்திய அரசியல் வட்டாரத்தில் சற்று சூடுபிடித்த இந்த ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினை கடந்த மாதத்தின் இறுதியல் மும்பாயில் நடைபெற்ற கோரத் தாக்குதலைத் தொடர்ந்து கொஞ்சம் அடங்கிப்போனது. 200க்கு மேற்பட்டோரை பலியெடுத்தும் பலநூற்றுகணக்கானோரை காயப்படுத்திய இந்தத் தாக்குதலானது இந்திய மக்களை மட்டுமல்லாது உலகமக்களின் மனங்களையும் தீண்டிவிட்டது என்றுகூறலாம். இதனால் இலங்கைப் பிரச்சனை தொடர்பான விவாதங்கள் இந்தியாவில் சற்று மந்தமடைந்திருக்கிறது. என்றாலும் முதலிலே திட்டமிடப்பட்டிருந்தபடி கருணாநிதியும் தமிழக எம்பிக்களும் மன்மோகனை சந்திக்கும் திட்டம் கைவிடப்படவில்லை. அந்த சந்திப்பும் நடைபெற்று முடிந்திருக்கிறது. முடிவில் மன்மோகன்சிங் அரசும் ஏதோ சாட்டுக்கு (பம்மாத்துக்கு!) பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கிறது.
இதற்கிடையில் ஆயுதங்களை கீழேவைத்தால்தான் புலிகளுடன் பேச்சுவார்த்தையென அறிவித்திருக்கும் இலங்கை அரசு இந்தியாவின் கோரிக்கைகளுடன்வரும் பிரணாப்பின் கருத்துக்களை எவ்வளவுதூரம் செவிமடுக்கப்போகிறது என்பது சந்தேகம்தான்.
ஏனைய தூதுவர்களைப்போன்று(வழக்கம்போல) பிரணாப்பும் இலங்கை வந்து அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவிட்டு வெறும் அறிக்கைகளை விடப்போகிறாரோ அல்லது இலங்கைப்பிரச்சனைக்கு ஏதும் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

2 கருத்துகள்:
//முடிவில் மன்மோகன்சிங் அரசும் ஏதோ சாட்டுக்கு (பம்மாத்துக்கு!) பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கிறது.
கருணாநிதிதான் சொன்னாரே தவிர புதுடில்லி இப்படிச் சொன்னதா? - இல்லை.
எப்போது வருவார்? - எவருக்கும் தெரியாது.
இதில் மறைந்துள்ள அர்த்தங்கள் புரிய அரசியல் அறிவு தேவையேயில்லை. பாமரருக்கும் தெரியும். அதனால் தான் அவர்கள் தங்கள் காதுகளை அடிக்கடி தடவிக்கொள்கின்றார்கள். யாரும் பூச்சூடக்கூடாதல்லவா?
http://ckalaikumar.blogspot.com/2008/12/blog-post_12.html
கருத்துரையிடுக