A Promised Land

15 அக்டோபர் 2008

தனது தனித்துவத்தை இழக்கின்றாரா இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்..




12B படமே இவருடைய முதல் படம் எனினும் மின்னலே படப் பாடல்கள்தான் முதலில் வெளிவந்தன. மின்னலே படப் பாடல்கள் வெளிவந்தவுடன் தமிழ் இசையுலகிற்கு கிடைத்த ஒரு சிறந்த இசையமைப்பளர் என்று எல்லோராலும் நினைக்கும் அளவிற்கு இசைவிரும்பிகள் மிகவும் எதிர்பார்த்த ஒருவர். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானுடைய உதவியாளராக இருந்து இசையுலகிற்கு பிரவேசித்தவர் என்ற வகையிலம் கூட ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டவர். அந்த எதிர்பார்ப்பை தனது அடுத்தடுத்து வந்த படங்களில் இனிமையான மெலடிப்பாடல்கள் மூலமும் ஏனைய பாடல்கள் மூலமும் மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தினார். தொடர்ச்;சியாக மூன்று வருடங்கள் அவருக்கு கிடைத்த பிலிம்பேர் விருதுகளை இதற்கு சான்றாக கூறலாம். ஹரிஸ் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே (ஏறத்தாள 95% ஆனவை) வெற்றியடைந்திருக்கின்றன. அத்துடன் பல படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தது இவருடைய பாடல்தான் என்று கூறினால் அது மிகையாகாது.

இதன் பிறகு ஹரிஸ் என்றால் மெலடி , மெலடி என்றால் ஹரிஸ் எனும் அளவிற்கு மிகவும் பிரபல்யம் அடைந்தது இவரது மெலடிப்பாடல்கள். இதற்கு உதாரணமாக வசீகரா, ஒன்றா இரண்டா,பார்த்த முதல்நாளே,போன்ற பல பாடல்களை கூறிக்கொண்டே செல்லலாம். இவர் இசையமைத்த சாமி படப்பாடல்களின் வெற்றியை தொடர்ந்துதான் சங்கரின் அன்னியன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தளவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக இயக்குனர்களால் விரும்பப்படும் ஒருவராக ஹரிஸ் மாறியிருந்தார்.

ஆனால் அண்மைய சில காலங்களாக வெளிவரும் இவருடைய பாடல்கள் தன்னுடைய பாடல்களையே தழுவியதாகவும் வேறுபல பாடல்களை அப்படியே தழுவியவையாகவும் அல்லது வேறுபாடல்களை ஞாபகப்படுத்துபவையாகவும் அமைந்துகொண்டிருக்கின்றன எனும் பொழுது மிகவும் கஸ்ரமாத்தான் இருக்கிறது. பல பாடல்கள் சற்றும் வித்தியாசம் இல்லாமல் அப்படியே பிரதி( Copy) செய்யப்பட்டிருக்கிறது. அண்மையில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படப்பாடல்கள் கூட இவருடைய ஏனைய பல பாடல்களை நினைவுபடுத்துகின்றது.




இவற்றை நோக்கும் போது மெட்டுக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவpட்டதா??? என்று கேட்கத் தோன்றுகின்றது. இவற்றை பார்க்கும் போது ஹரிஸின் ஆரம்ப காலப் பாடல்களும்கூட பிரதி செய்யப்பட்ட பாடல்களா என்ற பெரியகேள்வி கூட என்னுள் எழுகின்றது. இவற்றிற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது அதாவது இனிவரும் படங்களில்
நல்ல தரமான தழுவல்கள் இல்லாத பாடல்களை ஹரிஸ் தரவேண்டும்.
அப்படி தருவதன் மூலமே ஹரிஸினுடைய பாடல்கள் என்ற பெயரைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை: