A Promised Land

02 அக்டோபர் 2008

மூட நம்பிக்கைகள்


இன்றைய நவீன உலகில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்தாலும் மூட நம்பிக்கைகள் மட்டும் மக்களை விட்டு மறைவதாக இல்லை. இவற்றுக்கு நிறையவே காரணங்களை கூறலாம். இவற்றில் பெரும்பான்மையானவை சமயத்தை சார்ந்தவையாக அல்லது தழுவியவையாக உள்ளன என்று கூறினால் அது மிகையாகாது.

இவ்வாறு மூடநம்பிக்கைகள் வளர்வதற்;கு மிக முக்கியமான காரணமாக அந்தந்த மக்களின் கலாச்சாரம் செல்வாக்குச் செலுத்துகின்றது.

மூட நம்பிக்கைகளை அதிகமாக ஆசிய நாடுகளே பின்பற்றுகின்றன என்று கூறலாம். அதிலும் குறிப்பாக தென் ஆசிய நாடுகளை(இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் போன்ற நாடுகளை) குறிப்பிடலாம்.அதற்காக உலகத்திலுள்ள ஏனைய நாடுகளில் இவை இல்லையெ கூற முடியாது. ஏனைய நாடுகளுடன் ஒப்பீடுகையில் ஆசியாவில் சற்று அதிகம் என கூறலாம்.

இலங்கை போன்ற நாடுகளில் இவை ஓரளவு குறைவாக காணப்பட்டாலும் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக இந்த மூடநம்பிக்கைகளை பின்பற்றி வருகின்றார்கள்.உதாரணமாக மழை பெய்யவில்லை எனில் மிருகங்களுக்கு திருமணம் செய்வது அவர்களுடைய கடவுள்களுக்கு மிருகங்களை பலியிடுவது போன்ற பலவற்றையும் கூறிக்கொண்டு செல்லலாம்.அத்துடன் பல பெண்கள் இவற்றால் சமூகத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

இவற்றில் ஈடுபடுவது சாதாரண பாமர மக்கள் முதல் படித்தவர்கள் மற்றும் அரசியல்திகள் என எல்லா வகையானவர்களையும் குறிப்பிட்டு கூறலாம்.
இவற்றில் மிகவும் கொடுமை மூடநம்பிக்கை என்ற பெயரில் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவது மற்றும் மக்களை ஏமாற்றுவதும் தான்.

காலத்திற்கு காலம் மனிதன் விஞ்ஞான ரீதியாக எத்தனையோ கண்டுபிடிப்புக்கள் எத்தனையோ மாற்றங்கள் என ப+மியையும் தாண்டி விண்வெளியை ஆராய்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் நாம் இன்றும் மூட நம்பிக்கைகளை பின்பற்றிக் கொண்டு இருக்கின்றோம் எனும் பொழுது மிகவும் கவலையளிக்கின்றது.


இன்று பலர் மூடநம்பிக்கைகளை களைய எவ்வளவோ முயர்ச்சிகளை மேற்கொள்ளுகின்றார்கள்.ஆனாலும் இது ஒரு சவாலான விடையம் என்பது வெளிப்படை உண்மை.எத்தனை பாரதிகள் இந்த மண்ணில் தோன்றினாலும் இந்த மூடநம்பிக்கைகளை மக்களின் மனங்களிலிருந்து அவ்வளவு சுலபமாக ஒழித்து விட முடியாது என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை: