A Promised Land

23 ஆகஸ்ட் 2008

நீடூழி வாழ...


நீடூழி வாழ... நாள் தவறாமல் ஓடுவீர்!


நீடுழி வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள், சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, ஆரோக்கியத்துக்குத் தேவையான வழிமுறைகளை கடைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது இயல்பு.

ஆனால், ஆரோக்கியம் மீது அக்கறையுள்ளவர்களில் பலரும் எளிமையான உடற்பயிற்சிகளைக் கூட செய்வதற்கு தயங்குவதை பார்க்கலாம்.

இத்தகைய நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலிஃபோனியாவிலுள்ள ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஒருவர் நீடுழி வாழ வேண்டுமானால், நாள்தோறும் தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பது தெரிய வருகிறது.

அன்றாடம் ரன்னிங்கில் ஈடுபடுவதால், இதய நோய் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்வதுடன், புற்றுநோய் மற்றும் அல்ஸீமர் போன்ற நரம்பு நோய்கள் வராமலும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 20 ஆண்டுகளாக, தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவோரை கண்காணித்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: