A Promised Land

31 டிசம்பர் 2008

துயரங்களுடன் கடந்து செல்லும் 2008ம் ஆண்டு

கடந்து செல்லும் இந்த 2008ம் ஆண்டானது மிகுந்த சவால்கள் நிறைந்த ஒரு வருடமாகவே முடிவடைகிறது. குறிப்பாக தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசியலுக்கும் ஒரு சவால் நிறைந்த ஆண்டாகவே நிறைவுபெறும் 2008ம் ஆண்டில் இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

January

ஜனவரி 1ம் திகதி

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற தியாகராஜா மகேஸ்வரன் பொன்னம்பலவாணேஸ்வரம் ஆலயத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.

தை 2ம் திகதி
கொழும்பு கொம்பனி வீதி குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் 20ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தை 3ம் திகதி
2002ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.

தை 8ம் திகதி
தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டி.எம். திசாநாயக்க குண்டுத் தாக்குதலின்போது உயிரிழந்தார். ஜனவரி

தை 13ம் திகதி

யசூசி அகாசி இலங்கைக்கு விஜயம் முறிவுற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அரசுடன் கலந்துரையாடினார்.

தை 14ம் திகதி
சர்வகட்சி குழுவினால் அரசியல் தீர்வாக 13வது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது.

தை 29ம் திகதி
மன்னாரில் பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச்சென்ற பஸ்பண்டியின் மீது நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 11 சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

தை 30ம் திகதி 2008
25 ஆண்டுகால இலங்கையின் இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தமிழர்களின் இறைமையை ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அங்கீகரிக்க வேண்டும் என தமிழீழ விடுதலை புலிகள் விடுத்த வேண்டுகோளில் இந்நாட்டு சிறுபான்மை மக்கள் மீது இலங்கை அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது என குற்றம் சாட்டியது.

February
மாசி 2ம் திகதி
தம்புள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

மாசி 3ம் திகதி
கொழும்பு கோட்டை ரயில் நிலையக்குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மாசி 4ம் திகதி
வெலியோய கொப்பேகடுவ சந்தியில் மக்கள் பிரயாணம் செய்துகொண்டிருந்த பஸ் ஒண்றின் மீது கிளைமோர்; தாக்குதலில்; 13பேர் கொல்லப்பட்டதுடன் 17பேர் காயமடைந்தனர்.

மாசி 26ம் திகதி
நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துவருவதாக ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் மற்றும் இப்பிரதேசங்களில் பணிபுரியும் அரசசார்பற்ற அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன..

March
பங்குனி 6ம் திகதி

தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவநேசன் கிளிநொச்சி மாவட்டத்தின் மாங்குளம் மல்லாவி வீதி கனகராயன் குளம் எனும் இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
பங்குனி 11ம் திகதி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பு மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 9 உள்ளுராட்சி மன்றங்களில் 8 மன்றங்களில் வெற்றியீட்டியது.

April
சித்திரை 6ம் திகதி

நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அரசாங்கத்தின் கொரடாவுமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே உட்பட 13பேர் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பிரதேசத்தில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

சித்திரை 14ம் திகதி
மன்னார் மாவட்டத்தில் யுத்த நிலை தீவிரமடைந்துவருவதினால் விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மேற்கு பிராந்தியிங்களில் இருந்து 600 மாணவர்கள் உட்பட 25000ற்கும் அதிகமானோர் குடிபெயர்ந்து வரும் ஆபத்தான நிலையை எதிர்நோக்கியிருந்தனர்.

May
வைகாசி 9ம் திகதி
அம்பாறை நகரில் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் உட்பட 11பேர் கொல்லப்பட்டனர். மேலும் 29பேர் காயமடைந்தனர்.

வைகாசி 11ம் திகதி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டனி கிழக்கில் இடம்பெற்ற முதலாவது மாகாணசபை தேர்தலில் 37ஆசனங்களில் 20 ஆசனங்களை கைப்பற்றியது.

வைகாசி 13ம் திகதி

EPDP அமைப்பின் ஆலோசகரான மகேஸ்வரி வேலாயுதம் யாழ். கரவெட்டியில் அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வைகாசி 16ம் திகதி

கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமச்சராக எஸ். சந்திரகாந்தன் நியமனம்.

வைகாசி 26ம் திகதி
தெஹிவயில் ரயில் பெட்டியில் குண்டொன்று வெடித்ததினால் நான்கு பெண்கள் உட்பட 8 பிரயாணிகள் கொல்லப்பட்டனர்.

June
ஆனி 4ம் திகதி தெஹிவளையில் கரையோர ரயில் பாதையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் காயமடைந்தனர்.

ஆனி 6ம் திகதி
பிலியந்தலை பஸ்ஸில் சக்திவாய்ந்த குண்டொன்று வெடித்ததினால் 21பேர் கொல்லப்பட்டதுடன், 40 பேர் காயமடைந்தனர்.

யுத்த செய்திகளை திரட்டி அவற்றை வெளியிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களுக்கு ஒரு வழிகாட்டலை அறிவித்துள்ளது.

ஆனி 18ம் திகதி
பேச்சுவார்த்தைக்கு முன் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என அரசாங்கத்தின் வேண்டுகோளை விடுதலைபுலிகள் நிராகரிப்பு

July
ஆடி 18ம் திகதி
ஓமந்தைப் பாதை மக்களுக்காக திறக்கப்பட்டது.

ஆடி 21ம் திகதி
SAARC உச்சிமாநாட்டிற்காக ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ம் திகதிவரை விடுதலைபுலிகள் ஒருதலைபட்சமான யுத்தநிறுத்தத்தை அறிவித்தது.

SAARC 22ம் திகதி
விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்தத்தை அரசு நிராகரித்தது.

August
ஆவணி 03ம் திகதி

2மாதங்களாக நடைபெற்றுவரும் ஆகாயதாக்குதலினால் சுமார் 30000பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Sebtenber
புரட்டாதி 19ம் திகதி
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீள் குடியேற்றங்கள் ஏறத்தாழ முடிவடையும் நிலையை அடைந்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

புரட்டாதி 21ம் திகதி
ஐந்து வருடத்துக்குள் கொழும்பில் தங்கியுள்ள வடபகுதி மக்களுக்கான பதிவு இடம்பெற்றது.

October
ஜப்பசி 5ம் திகதி
கொழும்பில் வாழும் கிழக்கு மக்களுக்கான பதிவு இடம்பெற்றது.

ஜப்பசி 6ம் திகதி

ஐக்கிய தேசிய கட்சியின் வடமத்திய மாகாணசபை எதிர்கட்சி தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 28பேர் பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள ஐக்கியதேசிய கட்சி காரியாலயத்தில் தற்கொலை குண்டுதாரரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஜப்பசி 24ம் திகதி 2008
தற்போது நாட்டின் வடபகுதியில் நடைபெற்றுவரும் யுத்தம் தொடர்பாக காயதடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவிப்பதை இடைநிறுத்தி வைத்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.

ஜப்பசி 26ம் திகதி
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்து புத்தளம் மாவட்டத்தில் குடியிருக்கும் மக்கள் பற்றிய விசேட கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பசி 28ம் திகதி
விடுதலைபுலிகள் விமானங்கள் மன்னாலிலும் கொழும்பிலும் குண்டுகளை வீசியது.

மற்றுமொரு விடுதலைபுலிகளின் இலகு விமானமொன்று மன்னாரின் இராணுவ தலைமையகம் அமைந்துள்ள தல்லாடியில் மூன்று குண்டுகளை வீசியது.

ஜப்பசி 30ம் திகதி
பூநகரிக்கு முன்பு மேற்கு கரையோரத்தில் விடுதலைபுலிகளது பலம்வாய்ந்த தளமாக இருந்த நாச்சிகுடாவை இராணுவத்தினர் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

November
கார்த்திகை 9ம் திகதி
இலங்கை அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் செய்துகொள்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக விடுதலைபுலிகள் அறிவித்தனர்.

கார்த்திகை 15ம் திகதி
வடபகுதியில் உள்ள விடுதலைபுலிகள் கேந்திரநிலையமான பூநகரியை இராணுவம் கைப்பற்றியது.

கார்த்திகை 25ம் திகதி
மாங்குளம் மாவட்டத்தின் மாங்குளம் முல்லைத்தீவு ஏ 34 வீதியில் மாங்குளத்திற்கு வடகிழக்கில் 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள விடுதலைபுலிகளின் பிரதான தளமான ஒலுமடுவை இராணுவம் கைப்பற்றியது.

December
மார்கழி.10
ஜனாபதி மஹிந்த ரணில் சந்திப்பு

மார்கழி.26
ஆழிப்பேரலையின் நான்காம் ஆண்டு நிறைவு தினம்.

மார்கழி 28
வத்தளையில் இராணுவ முகாம் மீது தற்கொலைத் தாக்குதல்

29 டிசம்பர் 2008

இன்றைய சூழலில் தமிழ் இளையவர்களுக்கு உள்ள குறைபாடுகள்


நான் இலங்கையில் யா ரிவி எனும் தொலைக்காட்சியில் பணிபுரிகின்றபடியால் கடந்த இரு வாரங்களுக்குமுன் தமிழ் இளையவர்களை பற்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தோம்.
அதாவது இன்றைய சூழலில் தமிழ் இளையவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சனைகள் என்ன? இந்தப் பிரச்சனைகளைவிட இவர்களுக்குள்ள வாய்ப்புக்கள் என்ன? அரிதான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்ற இவர்கள் தங்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள எத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள் போன்ற பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றை ஒழுங்கு செய்தோம். முதலில் நாம் இசை எழுத்து வலைப்பதிவு போன்ற ஒவ்வொரு துறைகளில் இருந்தும் மூன்று இளையவர்களை இந்த கலந்துரையாடலில் நிகழ்ச்சியில் பங்குபற்றவைக்கவேண்டும் என முடிவு செய்தோம்.
இசைத்துறை சார்பாக இலங்கையில் கிருஷான் போன்ற பலரின் அல்பங்களுக்கு இசையமைத்துவரும் நோயல் ஆரோக்கியம் அவர்களையும் எழுத்துறை சார்பாக சஞ்சிகைகள் பலவற்றில் எழுதிவரும் பர்வீன் அவர்களையும் தொடர்புகொண்டு உறுதிசெய்தோம். பின்னர் வலைப்பதிவு சம்பந்தமாக ஒருவரை தேடினால் வலைப்பதிவு எழுதுபவர்கள் பலர் இலங்கைக்கு வெளியே இருந்து பதிபர்வர்களாக இருந்த காரணத்தினால் இலங்கை வலைப்பதிபவர் ஒருவரை தேடிப்பிடிப்பதென்பது மிகவும் சிரமமாக போய்விட்டது. சிலவலைப்பதிவாளர்களை அணுகியபோது தனிப்பட்ட காரணங்களுக்காக மறுப்பு தெரிவித்தார்கள். சில பேருடைய மின்னஞ்சல்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுமாறு மின்னஞ்சல்கள் பலவற்றையும் அனுப்பி பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக போய்விட்டது.
வெற்றி வானொலியின் முகாமையாளரும் நண்பருமான லோசன் அண்ணாவைத் தொடர்புகொண்டு என்னசெய்யலாம் என்றும் ஆலோசனைகளும் கேட்டாகிவிட்டது. இந்த நேரத்தில் வலைப்பதிபவர் ஒருவர் கிடைக்காவிட்டால் வேறு ஒரு துறையைச் சேர்ந்தவரை கலந்துரையாடலில் பங்குபற்ற வைப்பது என்ன மாற்று யோசனையும் என்னுள் இருந்தது. இதை என்னுடைய சிரேஷ்ர தயாரிபாளரிடமும் கூறி அனுமதியும் பெற்றாகிவிட்டது.
இவ்வாறு பலவழிகளிலும் சிந்தித்துகொண்டு இருந்தபோதுதான் நான் மின்னஞ்சல் அனுப்பியவர்களுள் ஒருவரான இராகலை கலை எனும் பெயரில் வலைப்பதியும் கலைக்குமார் அன்று மாலை என்னை தொடர்பு கொண்டார். அவருக்கு எங்களுடைய நிகழ்ச்சியைபற்றி விளக்கியவுடன் கலையும் அந்த நிகழ்வுக்கு சம்மதித்தார். ஏன் இவற்றை நான் கூறுகின்றேன் என்றால் கீழே அந்தக் கலந்துரையாடலின் பகுதிகளை தரவிருக்கிறேன்.
இவர்களோடு கலந்துரையாடுபவர் எங்களுடைய குழுவின் சிரேஷ்ர தயாரிப்பாளர் ரஜீத்

ரஜித்-
வணக்கம் இன்றைய காலந்துரையாடல் பகுதியில் நாம் காத்திரமான ஒரு விடயம்பற்றி கதைக்கவிருக்கிறோம்.அதுதான் எமது சமூகத்திலே தமிழ் இளையவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சனைகள் என்ன?, குறிப்பாக இந்தப் பிரச்சனைகளைவிட இவர்களுக்குள்ள வாய்ப்புக்கள் என்ன? அரிதான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்ற இவர்கள் தங்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள எத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள், போன்ற விடயங்களைப் பற்றி இன்றுநாம் கலந்துரையாடவிருக்கின்றோம். இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ள பாவீன் வந்திருக்கின்றார். இவர் எழுத்துத்துறையில் மிகவும் ஈடுபாடுடைய ஒருவர். அத்தோடு நோயல் ஆரோக்கியம் அவர்களும் வந்திருக்கின்றார். இவர் உண்மையாகவே இசைத்துறையில் ஈடுபாடும் பல படைப்புக்களை படைத்தவண்ணம் இருக்கின்றார். அடுத்து கலையும் எம்மோடு இணைந்துள்ளார். கலை குறிப்பாக வலைப்பதிவு அல்லது Blogwriting இதிலே மிகவும் பல படைப்புக்களை படைத்தவண்ணம் இருக்கின்ற ஒருவர்.
முதலாவதாக நாம் இலங்கை இளையவர்களின் தமிழ் இளையவர்களின் பிரச்சனைகள் குறித்து பேசுகின்ற போது இளையவர்களாக உங்களது முயற்சிகளில் ஈடுபடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் சூழல் தற்போது காணப்படுகின்றதா?

பர்வீன்-

என்னைப்பொறுத்தமட்டில் அது குறைவு. மிகமிகக்குறைவு. அரிதாகத்தான் இருக்கின்றது.பொதுவாக சுயமாக ஒருவர் ஆர்வம் இருந்தாலும்கூட எந்தத்துறையாக இருந்தாலும் அந்தவழிமுறை இன்னும் தெரியாமல்தான் இருக்கிறது. எப்படி எங்குசென்று உதாரணமாக எழுத்துத்துறை என்னுடைய துறையைபற்றி பேசுவதானால் யாரை சந்திப்பது, எப்படி நாங்கள் பன்முகத்தளங்களில் எமது ஆளுமைகளை வளர்த்துக்கொள்வது, யார்மூலமாக எமது எழுத்துத்துறையை அபிவிருத்தி செய்துகொள்ளலாம், இப்படியான பிரச்சனைகளை எமது இளையவர்கள் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இரண்டாவது அதற்கான உரியதளம் அவர்களது கற்பனைவளத்தை முதலீடு செய்யக்கூடிய ஒழுங்கானதளம் இன்னும் இலங்கையை பொறுத்தளவில் இல்லை என்கிற நிலைப்பாடு இருக்கிறது.

ரஜித்-
நோயல் உங்களிடம் கேட்கவிரும்புவது, இசைத்தறையிலே எவ்வாறு இத்தகைய அரிதான வாய்ப்புக்களும், அதற்கான உங்களுடைய முயற்சிகளும் திணறல்களும் எப்படியிருக்கின்றது?

நோயல்-

கடினமான ஒருவிடயம். நுழைவது என்பது லேசான ஒரு விடயமல்ல. இசைத்துறையென்பது பல வாய்ப்புக்கள் இருக்கு. இல்லையென்று சொல்லுறதுக்கில்லை. ஆனால் எல்லோருக்கும் தெரியாது. வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்துகிறது, அந்த வாய்ப்புக்கள் கிடைக்கிற இடத்தை எப்படி அணுகுகின்றது, போன்ற விடயங்கள் விசயங்கள் கனபேருக்கு தெரியிறது இல்லை.

ரஜித்-
இதற்கான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? குறிப்பாக தமிழ்த் துறையொன்றை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் இருக்கின்ற பிரச்சனைகள் என்ன?

நோயல்-
தமிழரென்று சொல்லேக்குள்ள முன்னுக்கு வரப்பயம். ஒன்டு என்னவென்றால் இத்தகைய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துகிறது என்றால், ஒன்றில் நாங்கள் மட்டகளப்பிலிருந்தோ, யாழ்ப்பாணத்திலிருந்தோ, நுவரெலியாவிலிருந்தோ, தமிழ் மக்கள் செறிவாக இருக்கிற இடங்களிலிருந்து இந்தமாதிரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்த முடியாது.
கொழும்புக்க வரவேணும். கொழும்புக்கு வந்தால் அதற்குள்ள ஆயிரத்தெட்டு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும். நானும் முகம் கொடுத்திருக்கின்றேன். அப்படியான நிலவரங்களை யோசித்து ஏன் சும்மா நிம்மதியாக வீட்டில இருக்கிறோம். சும்மா பாடுவோம் எண்டு போயிட்டு கொழும்பில இப்படி ஆயிரத்தெட்டுபேரின் கேள்வியைகேட்டு இந்தமாதிரி பிரச்சனைகள் எங்களுக்கு தேவையில்லையென்று சொல்லி அது ஒரு defiantly. ஒரு drawback தான்

ரஜித்-
இவ்வாறு நினைக்கின்ற அல்லது இவ்வாறான நிலமைகளுக்கு வருகின்ற தமிழ் இளையவர்கள்தான் அதிகம் அதிகமாக காணப்படுகின்றார்கள்.

நோயல்-
முடிவெண்டதைவிட அது நடக்குது.

ரஜித்-
ஆகவே அந்தநிலையை மாற்றியமைப்பதற்கு நீங்கள் எடுத்திருக்கும் முயற்சியைபற்றி கூறமுடியுமா?

நோயல்-
மாத்தியமைக்கிறது எண்டால் அந்த நிலவரம் இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
நான் பல்கலைக்கழகம் சென்று முடியும்வரைக்குள்ளும் அந்தபிரச்சனை இருந்துகொண்டிருந்தது. அந்த பல்கலைக்கழக அடையாள அட்டைதான் என்னை கனதரம் காப்பாற்றியிருக்குது.அற்றது அந்தவொரு சூழ்நிலைதான். பல்கலைகழகத்தில் போய்இருந்து அதாலகிடைத்த வலையமைப்பு, அதாலகிடைத்த பல தொடர்புகளை பயன்படுத்தித்தான் ஓரளவிற்கு இலங்கையிலுள்ள இசை, இலங்கையின் இசைக்கு இலக்கியமும் அந்த Fusion இலங்கையில் மடடுமன்றி மலேசியா இந்தியா வரைக்கும் எடுத்தசெல்லும் வாய்ப்பு கிடைத்தது.

ரஜித்-
கலை, உங்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது? குறிப்பாக இந்த இரண்டு துறைகளையும்விட இதுகொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கிறது. காரணம் என்னவென்று சொன்னால் இணையம் என்பது சர்வதேச ரீதியில் இலகுவாக யாரையும் நெருங்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதில உங்களது படைப்புக்களை கொண்டுபோறதில சாதகமான விசயங்களும், அதில நீங்க எடுக்கின்ற முயற்சிகளும் என்ன?

கலை-

அதாவது எமக்கு பாதகம் என்று கூட பேசமுடியாது. சாதகம் எண்டுசொல்லப்போனால் நமக்கு timeing கொஞ்சம் தேவை. உண்மையாக சொல்லப்போனால் நான் வேறுஒரு துறையில இருந்துகொண்டுதான் அதிலகிடைக்கிற கிடைக்கிற நேரத்திலதான் செய்துகொண்டு இருக்கிறேன். நமக்கு தேவையாக நெவ உழnநெஉவழைn உணடு இருக்கவேண்டும். அத்துடன் இணையத்துக்கு போறதுக்கு உழஅpரவநச ஒண்டும் இருந்தால்மட்டும் போதும். தமிழில ரைப்பண்ணி செய்யுறதுகூட முன்னம் மிகவும் கஸ்ரமாகத்தான் இருந்தது. நிறைய வழிமுறைகள் இருக்குது. அதுமட்டுமல்ல இந்த இரண்டுபேரினுடைய படைப்புக்களை அதனூடாக வெளியில எல்லாத்துக்கும் காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்குது.

ரஜித்-
இப்ப நாங்கள் உங்கள் மூன்றுபேருடனும் கதைத்ததில் இருந்து எனக்குதெரியிற விசியம் என்னவென்றால் தமிழ் இளையவர்களுக்கு வாய்ப்புக்கள் அரிதாக இருந்தாலும் அவங்கட முயற்சியின் காரணமாகத்தான் இத்தகைய ஒரு நிலையை தமிழ் இளையவர்கள் இலங்கையில் அடையலாம். அடையமுடியாது என்பதல்ல, அடையமுடியும் எனும்ஒரு நம்பிக்கை காணப்படுகின்றது. இத்தகைய ஒரு தளத்தை வைத்துக்கொண்டு அவ்வாறான ஒரு தளத்திலே தற்போது காணப்படுகின்ற சூழல், பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளம் தழிழ்மக்களுக்கு இருக்கின்றது. அவ்வாறான சூழலில் நீங்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் என்ன? இந்த மாதிரியான நீங்கள் முன்னெடுக்கின்ற வழியிலேயே பயணிக்க விரும்புகின்ற தமிழ் இளையவர்களுக்கு நீங்கள் உங்களுடைய துறையிலேயே என்ன கூறவிரும்புகிறிர்கள்?

பர்வீன்
எழுத்துத்துறையை பொறுத்தமட்டில் அதற்கு கடிமையான வாசிப்பு தேவை. ஆர்வம் இருந்தாலும் மட்டும் போதாது எழுத்துத்துறையை பொறுத்தமட்டிலே சுயதிருப்தி இருக்கக்கூடாது. அதாவது தான் எழுதுகின்ற அந்த எழுத்து நான் வாசித்து திருப்தி அடைந்துகொள்ளக்கூடிய மனப்பாங்குதான் இன்றைய இளையவர்களிடம் அதிகமாக இருக்கின்றது. இதுகூட இன்றைய இன்றைய இளையவர்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்ற காரணியாகும். இப்போது நீங்கள் கேட்ட அந்தக் கேள்விக்கு இணங்க இப்போது இருக்கின்ற பாதுகாப்பு கெடுபிடிகள் நாட்டு நிலவரம் இதையும் தாண்டி இளையவர்கள் எமுத்துத்துறையில் பரிணமிக்க வேண்டுமென்றால் பொதுவாக அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் அவலக்குரல்களை எடுத்துச்சொல்லவேண்டும். அதாவது இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பார். இந்த காலத்தில் நடந்த அவ்வளவு சம்பவத்தினையும் அனுபவித்ததையும் தான் அன்றாடம் காணுகின்றவற்றை தனது சுற்றத்தார் அனுபவித்தவற்றை தான் உணர்ந்து உள்வாங்கி அதை படைப்பிலக்கியமாக கொடுக்க முன்வரவேண்டும். இதுதான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த படைப்பாளியை உருவாக்குவதற்கு அத்திவாரமாக அமையும்.

ரஜித்-
ஆனால் பர்வின் நீங்கள் சொல்கின்ற இந்த நிலைமைக்கு தங்களுடைய படைப்புக்கள் இருந்தாலும். அதைக்வெளிக்கொண்டு வருகின்ற ஊடகம் இருக்கவேண்டும். ஊடகம் என்று சொல்லேக்குள்ள வழமையாக நாங்கள் பார்க்கின்ற ஊடகங்கள் மட்டுமல்ல புத்தகங்கலோ அல்லது மெகசின்கலோ பலவிதமான ஊடகங்கள் இருக்கு அவ்வாறான ஊடகங்கள் மிகவும் குறைவாகத்தானே பாணப்படுகின்றது. அதைப்பற்றி உங்களுடைய நோக்கம் என்னவாக இருக்கின்றது?

பர்வீன்
எழுத்துத்துறையை பொறுத்தவரையில் அரிதாக இருந்தாலும் எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது அந்தந்த பிரதேசங்களில் கவிதை இலக்கியம் எனும்போது கவிதைக்கான இதழ்கள் வருகின்றது. திருகோணமலையில் இருந்து நீங்களும் எழுதலாம் எனும் ஒரு கவிதை இதழ் வருகின்றது. அதேபோல் அனுராதபுரத்திலிருந்தும் இரண்டு இதழ்கள் வருகின்றது. ஆவ்வாறே தாயகம் என்று யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இதழ் வருகின்றது. இவைகளெல்லாம் அந்தந்த பிரதேசங்களை பிரதிநிதித்துவபடுத்துகின்றவர்களுக்கு ஒரு படைப்பு தளங்களாக பரிணமித்து கொண்டிருக்கின்றன.

ரஜித்-
உங்களிடம் கேட்க விரும்புவது இசைத்துறையில் எப்படி இருக்கிறது? பாடல்களென்று சொல்லேக்குள்ள பாடல் வரிகளும் இசையும் உணர்ச்சிபூர்வமாகவும் காத்திரமாகவும் சொல்லக்கூடிய ஒரு ஊடகமாக காணப்படுகின்றது.ஆகவே நாட்டில் இருக்கும் பிரச்சனை, யுத்தம் இவ்வாறான உருக்கமான விடயங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றதா?

நோயல்-
நிற்சயமாக நிற்சயமாக. இதுக்கு வழியமைத்தவரை பற்றி ஒரு வார்த்தை சொல்லாவிட்டால் அது சரியில்லை. ஏனெண்டால் இந்த இலங்கையிலுள்ள தமிழ் படைப்புக்களை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கொண்டுவாறதுக்கு அந்த ஒரு பாதையை வகுத்தது கிருஷான் மகேசன் எண்டுதான நான் சொல்லுவேன். இலங்கையில பல படைப்பாளிகள் இருக்கிறார்கள் இல்லையெண்டு சொல்லுறதுக்கில்லை. இருந்தாலும் அந்த தரத்தில இசையை கொண்டுவந்தது. இலங்கையாக இருக்கட்டும் தமிழர் செறிவாக வாழும் மூன்று பிரதேசங்களாக இருக்கட்டும் மலேசியாவாக இருக்கட்டும் சிங்கப்பூராக இருக்கட்டும் அங்க எல்லா இடத்திலேயும் கிருஷான் எண்டால் எல்லோருக்கும் தெரியும்.இலங்கையின் தமிழ் இலட்சினையெண்டால் அவர்தான். அவர் அப்படி தொடங்கியதும் அப்படியானதுதான். அந்த
J-Town எனும் பாடலில் இருக்கக்கூடிய பாடல்கள் வார்த்தைகள் அதால இண்டைக்கும் பார்த்தீர்கள் எண்டால் அந்த மாதிரி பாடல்கள் செய்யவேண்டும் எண்டுசொல்லி அந்த பாதச்சுவட்டில வருவதற்கு பார்க்குறார்கள். இப்பகூட நானும் கிருஷானும் நிறைய நீங்க சொன்னமாதிரி பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கிறோம். ஏன் இரவில வேலைசெய்திட்டு வெளியால சாப்பிட போகேக்க ஏன் இந்த நேரத்தில என்ன செய்கிறீங்க என்ற மாதிரி பிரச்சினைகள் நிறைய இருக்கு. அதையும்விட தமிழர்கள் என்ற விடயத்தினால் தற்பொழுது நிலவரம் எங்களுடைய படைப்புக்களை வெளியில கொண்டுவாறதுக்கான முதலீடுகளை செய்வதற்கு யாரும் முன்வாறது குறைவு. ஏனெண்டால் அவங்களுக்கு அதால கிடைக்ககூடிய விளம்பரங்களோ பிரதிபலன்களோ குறைவு. ஏனென்றால் நாங்கள் இப்படிசெய்கின்ற படைப்புக்கள் போய்சேருகின்ற சனத்தொகை மிகவும் குறைவாக இருக்கிறது.

ரஜித்-
ஆகவே தடைகளையும் தாண்டி பற்றோடு முன்னுக்கு வரவேண்டியநிலை காணப்படும். அவ்வாறான நிறைய இளையவர்கள் எமது சமூகத்திற்கு மிகவும்தேவை.
கலை ஒரு முக்கியமான விடயம்தான் இணையமானது பெருமளவு கண்காணிக்கப்படுகின்ற போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றது. ஆகவே இணையத்தில விசயங்களை சொல்கிறதிலையும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றது. ஆவ்வாறான விதத்தில இதுசம்மந்தமான விடயங்களை எவ்வாறு வெளிக்கொண்டு வருகின்றீர்கள்?

கலை-
அததான் இதுமாதிரியான நிறைய தளங்களுக்கு போனாலும்சரி இங்கு நடக்கின்ற பிரச்சினைகளையோசரி, பாதுகாப்பு சம்மந்தமான அவ்வளவு விடயங்களும் அவ்வளவு தளத்திலையும் கிடைக்கின்றது. ஆனால் கூடுமானவரை நான்வந்து அந்தமாதிரியான செய்திகளை தவிர்த்துக்கொண்டு வருகிறேன். அதாவது பாதுகாப்ப பிரச்சினைகள் என்றுகூட சொல்லலாம். அதாவது நான் வலைப்பதிவில் கொண்டுவர நினைக்கின்ற விடயங்கள் உதாரணத்திற்கு இவருடைய படைப்புகளை எடுத்துக்கொள்வோம். குறிப்பிட்ட ஒரு சஞ்சிகையொன்று குறிப்பிட்டவொரு பிரதேசத்திலிருந்துதான் வெளிவருகின்றது. அந்தப் பிரதேசத்தில் இருக்கிறவர்களுக்குதான் இதைப்பற்றி தெரியும். இணையங்களுக்குள்ள இன்றைக்குள்ள இளைய சமுதாயம் அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில அதைப் பார்த்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய படைப்புக்களை அவர்களுடைய முகவரியோட பரவலாக்குறதும் நோக்கமாக இருக்கின்றது. அது மாதிரி இப்ப செய்து கொண்டு வாறதுகூட பன்னீர்செல்வம் என்று எனது பாடசாலை வகுப்பாசிரியர் ஒருவருடைய அண்மையில வெளியிட்ட “சிலமுகங்களும் சிலமுகமூடிகளும்” என்கின்ற நூலிலுள்ள கவிதைகளை அப்படியே தொகுத்து அந்த வலைப்பதிவினூடாக நான் Update பண்ணிக்கொண்டு வருகிறேன்.

ரஜித்-
சரி தமிழ் இளையவர்கள் என்ற ரீதியில இலங்கைத் துறைகளில் எழுத்துத்துறையாக இருக்கலாம், இசைத்துறையாக இருக்கலாம், இணையத்துறையாக இருக்கலாம் பலதுறைகளில் தங்களுடைய முயற்சிகளை எடுத்தவருகின்ற உங்கள் மூன்றுபேருக்கும் இதேமாதிரி செயற்படுகின்ற அனைவருக்கும் தமிழ் மக்களின் பிரார்த்தனை நிச்சயமாக இருக்கும். உங்களுடைய சேவையை தொடர்ந்து செய்யுங்கள். இன்று கலந்துரையாடலுக்கு வந்தமைக்கு மிகவும் நன்றி.

www.yatv.net
www.youtube.com/yatvwebcast

ஆரம்ப கையடக்க தொலைபேசிகள்

அலுவலக வேலை,வெளியூர் பயணம், சில சிக்கல்கள் அவற்றையெல்லாம் தாண்டி நீண்ட நாட்களுக்க பின்னர் பதிவுஎழுத ஆரம்பிக்கிறேன் மன்னிக்கவும் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. எனக்கு கிடைத்த சில புகைப்படங்களுடன் இன்னைய பதிவை இடுகின்றேன். தற்போது கையடக்க தொலைபேசிகள் எல்லாம் உள்ளங்கைகளுக்குள் வைக்கக்கூடியளவு மிகவும் சிறிதாக நாம் காண்கிறோம். ஆரம்பத்தில் எப்படி கையடக்க தொலைபேசிகள் இருந்திருக்கும் என்பதை கீழுள்ள படங்களை பார்த்து தெரிந்தகொள்ளுங்கள்








05 டிசம்பர் 2008

மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலும் சூடுதணிந்த இலங்கை விவகாரமும்

அண்மைக்காலமாக இலங்கைத்தமிழருக்க ஆதரவாக தமிழக மக்களிடையே பலமுனைகளிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் என்றுமில்லாதவாறு ஒலித்தன. முதலில் இதை கண்டும் காணாதுபோலிருந்த தமிழக திமுக அரசு தமிழக மக்களின் ஆதரவுகுரல்கள் கண்டும்காணாதிருக்கும் தனது ஆடசிக்கு பாதகமாகிவிடுமோ என்ற அச்சத்தில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியது. அனைத்துகட்சி கூட்டம் பிரதமருக்கு தந்தி பதவிவிலகும் எச்சரிக்கை மனிதசங்கிலிப்;போராட்டம் நிதியுதவி நிவாரணப்பொருட்கள்(பழநெடுமாறன் தலமையில முன்னம் சேர்க்கப்பட்ட உணவு மருந்துப் பொருட்கள் இப்போது எங்கிருக்கின்றது என்று தெரியவில்லை?? கருணாநிதி சேகரித்தபொருட்கள் வன்னிக்கும் சென்றுவிட்டது) போன்றவற்றை நாம் இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

தமிழகத்தின் இந்த ஒட்டுமொத்தமான எழுச்சிகண்டு இந்திய மத்தியஅரசும் சற்று ஆடித்தான் போய்விட்டது என்றுகூறினால் அது மிகையாகாது. இதன்காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் சாட்டுக்கு பல நடவடிக்கைகளை(!!) மேற்கோண்டது.அவை ஆக்கபூர்வமானவைகளாக இல்லாவிட்டாலும் ஏனோதானோ என்று சில நடவடிக்கைகளை? மேற்கொண்டது.

இந்திய அரசியல் வட்டாரத்தில் சற்று சூடுபிடித்த இந்த ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினை கடந்த மாதத்தின் இறுதியல் மும்பாயில் நடைபெற்ற கோரத் தாக்குதலைத் தொடர்ந்து கொஞ்சம் அடங்கிப்போனது. 200க்கு மேற்பட்டோரை பலியெடுத்தும் பலநூற்றுகணக்கானோரை காயப்படுத்திய இந்தத் தாக்குதலானது இந்திய மக்களை மட்டுமல்லாது உலகமக்களின் மனங்களையும் தீண்டிவிட்டது என்றுகூறலாம். இதனால் இலங்கைப் பிரச்சனை தொடர்பான விவாதங்கள் இந்தியாவில் சற்று மந்தமடைந்திருக்கிறது. என்றாலும் முதலிலே திட்டமிடப்பட்டிருந்தபடி கருணாநிதியும் தமிழக எம்பிக்களும் மன்மோகனை சந்திக்கும் திட்டம் கைவிடப்படவில்லை. அந்த சந்திப்பும் நடைபெற்று முடிந்திருக்கிறது. முடிவில் மன்மோகன்சிங் அரசும் ஏதோ சாட்டுக்கு (பம்மாத்துக்கு!) பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கிறது.

இதற்கிடையில் ஆயுதங்களை கீழேவைத்தால்தான் புலிகளுடன் பேச்சுவார்த்தையென அறிவித்திருக்கும் இலங்கை அரசு இந்தியாவின் கோரிக்கைகளுடன்வரும் பிரணாப்பின் கருத்துக்களை எவ்வளவுதூரம் செவிமடுக்கப்போகிறது என்பது சந்தேகம்தான்.
ஏனைய தூதுவர்களைப்போன்று(வழக்கம்போல) பிரணாப்பும் இலங்கை வந்து அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவிட்டு வெறும் அறிக்கைகளை விடப்போகிறாரோ அல்லது இலங்கைப்பிரச்சனைக்கு ஏதும் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

02 டிசம்பர் 2008

உலக எயிட்ஸ் தினம் (December 1st)



இன்றய நவீன உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் ஒரு உயிர்கொல்லி நோய்தான் இந்த எயிட்ஸ். இன்று நவீன மனிதன் எத்தனையோ கண்டுபிடிப்புக்களை செய்தாலும் இந்த உயிர்கொல்லி நோய்க்கான மருந்து ஒன்றைகண்டுபிடிக்கமடியாமல் இருப்பது ஒரு துரதிஸ்ரவசமான சம்பவம்தான். இதை யாராலும் மறுக்க முடியாது. முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளவேண்டும் எயிட்ஸ்(AIDS-Acquired Immune Deficiency Syndrome) என்பது பல நோய்கள் ஒன்றாக சேர்ந்த நிலையே தவிர தனி ஒரு நோய்யல்ல. இது மனிதனின் நிர்ப்பீடண தொகுதியை தாக்கி செயலிழக்க வைத்துவிடும்.

முதலில் இந்த உயிர்கொல்லி நோய் எப்படி உருவாகியது எனப்பார்ததால் ஆபிரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினருக்கு குரங்கிலிருந்து பரவியதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது ஆபிரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினர் குரங்குகளின் இரத்தத்தை பருகும் பழக்கம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக குரங்கிலிருக்கக்கூடிய S.I.V(Simion Immunodeficiency Virus) எனும் நோய்க்கிருமி இரத்தத்தின் வழியாக மனிதனின் உடலுக்குள் புகுந்து H.I.V
(Human Immunodeficiency Virus) ஆக தோற்றம் பெற்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இந்தக் வைரசுக்கு (Human Immunodeficiency Virus) என்று பெயர்வரக் காரணம் இவை மனிதனில் மட்டுமே உயிர்வாழக்கூடியவை என்றபடியால் ஆகும். HIV கிருமியானது மனித உடலுக்கு வெளியே 2-3 வினாடிகள் மட்டுமே உயிர்வாழக்கூடியது. அது தவிர மனிதனின் கண்ணீரைத் தவிர ஏனைய எல்லா திராவகங்களிலும் இது உயிர்வாழும். இந்த வைரஸ் ஆனது மனிதனில் காணப்படும் ஏனைய வைரஸ்களைவிடவும் மிகவும் வித்தியாசமானது. இவை மனிதனின் உடலிற்குள் தனது உருவத்தை மாற்றி புகுந்தவுடன் மனிதனில் காணப்படும் நோய்யெதிர்ப்பு கலங்களை அல்லது CD4/T4 கலங்களை ஒவ்வொன்றாக அழிக்கும். அதன்பின்னரே தனது வேலையை காட்டத்தொடங்கும். இவ்வாறு நடைபெறுவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும். இதனால் பரிசோதைனைகளால் மாத்திரமன்றி உடனடியாக இதை தெரிந்துகொள்ள முடியாது. கண்டுபிடிக்க பெரும்பாலும் கிட்டத்தட்ட 3 வாரங்கள் தொடக்கம் 3 மாதங்கள் வரையும்கூட ஆகலாம். ஒரு மனிதனுக்குள் HIV கிருமி நுளைந்து AIDS நிலையை அடைய ஏறத்தாள 8-15 வருடங்கள் வரையும் செல்லலாம்.

உலக எயிட்ஸ் தினம்
HIV மனித உடலில் காணப்படும் இடங்கள்

1. குருதி
2. யோனித்திரவகம், விந்துதிரவகம், விந்தணு
3. தாய்ப்பால்
4. எச்சில்
5. சிறுநீர்


மேலேயுள்ளவற்றில் எச்சில், மற்றும் சிறுநீரில் HIV காணப்படும் செறிவு மிகக்குறைவு. உதாரணமாக எச்சில் மூலம் ஒருவருக்ககு HIV பரவவேண்டும் என்றால் ஏறத்தாள 2 கலன்கள் எச்சில் தேவை.


HIV பரவும் முறை

பிரதானமாக மூன்று முறைகளில் HIV மனித உடலுக்குள் பரவுகிறது

1. HIV கிருமியுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு

2. HIV பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கு

3. HIV கிருமியுள்ள குருதியின்மூலம்



இலங்கையில் HIVயானது மேற்கூறிய மூன்று முறைகளிலும் 96%,3%,1% என்றவகையில் பரவுகின்றது.

HIV பரவாமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள்

1. பாலியல் தொடர்பே இல்லாது இருத்தல்/ செய்யாமல் விடுதல்

1. ஒருவனுக்கு ஒருத்தியென்று உண்மையாக இருத்தல்

4. உடலுறவின்போது பாதுகாப்பான வழிமுறைகளை கடைப்பிடித்தல்


இலங்கையில் இதுவரையிலும் பதிவின்படி 1024 பேர் HIV தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மேலும் 5000ம் பேருக்கு தொற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

உலகைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு சுமார் 15000 பேர் HIV தொற்றுக்குள்ளாகிறார்கள். இதைவிட ; நாளொன்றுக்கு சுமார் 8000 பேர் HIV யால் மரணிக்கிறார்கள்.சுமார் 60மில்லியன் பேர் இதுவரையிலும் HIV யால் பலியாகிவிட்டார்கள்.

22 நவம்பர் 2008

லோஷன் அண்ணா விடுதலை


கைதுசெய்யப்பட்ட வெற்றி வானொலியின் பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ.ஆர்.வி. லோஷன் இன்று
(22/11/2008) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

18 நவம்பர் 2008

வெற்றி எப் எம்" நிகழ்ச்சிப் பணிப்பாளர் ஏ.ஆர்.வி லோசனை விடுதலை செய்யுமாறு எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை

இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளரும் சக வலைப்பதிவருமான லோஷன் அவர்களை விடுதலை செய்யுமாறு பாரிஸில் அமைந்துள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் அமைந்துள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் சம்மேளனம்,இலங்கையில் கடந்த சனிக்கிழமை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட வெற்றி எப்.எம் வானொலியின் நிகழ்ச்சி பணிப்பாளர் ஏ.ஆர்.வி லோசனை விடுதலை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. லோசன் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு சாட்சியங்களின் அடிப்படையில் அமையவேண்டும் என்பதேயன்றி, சாதாரண தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. அத்துடன் வெற்றி எப் எம் வானொலியின் மற்றும் ஒரு ஊடகவியலாளரும் பொலிஸரால் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது

இது தொடர்பாக டெய்லி மிரர் இணைய தளத்தில் வெளிவந்த செய்தி
RSF urges release of 'Vetri FM' GM
Reporters Without Borders urges the Sri Lankan authorities to release the General Manager of Tamil Radio Station 'Vetri FM' A. R. V. Loshan, who was arrested at his home in the capital Colombo on Saturday, 15th November.
The senior radio presenter was arrested by the Terrorist Investigation Department (TID) on charges of alleged links with terrorists and for aiding in terrorist activities.
The global press freedom organisation said the TID allegations against him of having "links with terrorists" and "aiding terrorist activities" should be based on evidence and not on simple conjecture