A Promised Land

16 ஜனவரி 2010

மாற்றம் ஏற்படாது தடுக்க வேண்டும்

தலைப்பை பார்த்தவுடனேயே ஏதோ அரசியல் பதிவு என்று நினைக்கவேண்டாம். இது இயற்கையுடன் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு. அதாவது தற்போது புவியானது நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகின்றது. இதற்கு முக்கியமான காரணமாக மனிதனது செயற்பாடுகளை கூறலாம். அதிகரித்து வரும் நகர மயமாக்கல் இதற்கு முக்கியமான காரணமாகும்.
காலநிலை மாற்றத்தைால் எரிர்காலத்தில் புவியானது பாரிய சவால்களை சந்திக்க வேண்டி வரும். எனவே எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு தற்போதே சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும். அதற்கு புவியில் உள்ள ஒவ்வொருவருடைய பங்களிப்பும் முக்கியம் .

இயற்கையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு www.earthlanka.net எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது. தற்போது கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் EDEX 2010 கண்காட்சியில் Earthlanka தனது கண்காட்சி கூடத்தினை Green Zone ல் நிறுவியிருக்கின்றது. நீங்களும் EDEX 2010 கண்காட்சிக்கு சென்றால் ஏர்த்லங்காவின் Green Alliance கண்காட்சி ‍கூடத்திற்கு சென்று மேலதிக விபரங்களை பெற்று கொள்ளலாம்.
உங்களது கருத்துக்களை அவர்களுடைய கீழ்வரும் வலைப்பதிவிற்கு சென்று பதியலாம். உங்களுடை பெறுமதியான கருத்துக்கள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றகண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பிவைக்கப்படும்.
வலைப்பதிவு இங்கே அழுத்தவும்
www.earthlanka.com
Join Earthlanka Fan Club on Facebook "One Earth" Click Here

12 ஜனவரி 2010

பிணையில் விடுதலையானார் ஊடகவியலாளர் திசநாயகம்

2008ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடந்தவருடம் இலங்கை மேல்நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகம் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மேல் முறையீட்டு மனுவானது இன்னும் விசாரணையில் இருக்க அவரால் தாக்கல் செய்யப்பட்ட பிணைமனுவின் தீர்பின் ஊடாகவே இவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்காக குரல்கொடுத்த இவரது விடுதலையானது மகிழ்ச்சி அளித்தாலும் ஏனைய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே எனது கோரிக்கை

08 ஜனவரி 2010

எதிர்பார்பை அதிகரிக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா


பாடல்கள் மற்றும் இயக்குனர் நடிகர் என்று பல கோணங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் படம்தான் “விண்ணைத்தாண்டி வருவாயா” வாரணம் ஆயிரத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கியிருக்கும் திரைப்படம், வழக்கமக தனது படங்களுக்கு இசையமைக்கும் ஹரிஸ் ஜெயராஜை கழற்றி விட்டுவிட்டு ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடனும் லிட்டில் சுப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிஷாவும் இணையும் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பினை தோற்றுவித்துள்ளது. எங்களை ஒருகணம் சிலிர்க்கச்செய்த வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பின்னர் ஒரு அழகிய காதல்கதையுடன் வெளிவரும் படமென்று விண்ணைத்தாண்டி வருவாயா என்று கூறப்படுகின்றது.எதிர்பார்ப்பிற்கு இன்னுமொரு காரணம் அண்மையில் வெளியாகியிருக்கும் பாடல்கள் என்பதையும் கூறலாம். அண்மையில் பிபிசி தொலைக்காட்சியில் விண்ணைத்தாண்டி வருவாயா பாடலும் ஏ,ஆ.ரஹ்மானின் நேர்காணலும் ஒளிபரப்ப்பட்டிருந்தது. அத்தோடு பாடல் வெளியீடானது லண்டனிலேயே இடம்பெற்றது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும்.

"விண்ணைத்தாண்டி வருவாய" பாடல்களில் அந்த "ஹோசான" பாடலை குறிப்பிட்டு கூறலாம். தாமரையின் அருமையான வரிகளுக்கு தனது பாணியினிலே சிறந்த ஒரு இசையினை ரஹ்மான் வழங்கியிருக்கின்றார் என்றே கூறமுடியும். அத்துடன் அதில் கலந்திருக்கு இசை நுணுக்கம் போன்றவற்றை வைத்து பார்த்தால் நிற்சயம் இந்தப் பாடல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நல்ல ஒரு பெயரினையும் இந்த ஆண்டின் சிறந்த பாடல் என்ற இடத்தை பெற்றுவிடும் என்பதில் ஐய்யமில்லையென்பது என்கருத்து.

"ஹோசான" பாடலை கேட்டு மகிழ

14 டிசம்பர் 2009

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் சங்கடங்களும்

சரத்பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தில் ஏற்கனவே சூடுபிடித்துள்ள இலங்கையின் அரசியல்களம் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தல்
என அறிவித்தபின் மேலும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மத்தியில் அல்லது அவர்கள் சார்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியிலும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான நிலமை இன்னும் தெளிவில்லாமல்தான் இருக்கின்றது. ஏனென்றால் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும்தான் முதல் காரணம். தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு இரு வேட்பாளர்களும் இதுவரையும் தவறிவிட்டனர் என்றனர் என்றே கூறவேண்டும்.

சரத் பொன்சேகா இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்குதான் எங்களுடைய வாக்கை அளித்திருப்போம் என்று கூறுவோரும் இருக்கின்றார்கள். ஆனாலும் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வளவான நல்ல கருத்து இல்லையென்றுதான் கூறவேண்டும். தற்போதைய நிலையில் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்களுடைய வாக்கினை குறிவைத்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இதனுடைய ஒரு கட்டம்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய யாழ் விஜயம்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியினரும் தங்களுது பிரச்சாரங்களினையும் ஆரம்பித்திருக்கின்றார்கள். யுத்த வெற்றியினையே சிங்கள மக்களிடையே நடக்கும் பிரச்சாரங்களின்போது இரு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
உண்மையிலே தமிழ் மக்களுடைய நிலையோ யாருக்கு வாக்களிப்பது என்று வரும்போது இத்தேர்தலில் சங்கடமான நிலைதான். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இனவாத கருத்தினை கொண்டவர் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. அத்தோடு யாழ் மக்களுக்கு அவரைப்பற்றி ஓரளவுக்கு தெரியும்; ஏனென்றால் யாழின் கட்டளை தளபதியாக இவர் இருந்தவர்.இவரின் காலப்பகுதியில்தான் யாழில் சர்ச்சைக்குரிய விடயங்கள் பல உலக அளவில் பேசப்பட்டன. ஆனாலும் தற்போது தனது இராணுவ சீருடையினை கழைந்து அரசியிலில் நுழைந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதால் தனக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் என்றும் நம்புகின்றார். அத்தோடு தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கு இவர் முகாம் மக்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியின் ஆட்சியில்தான் தமிழர்கள் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது என்ற கருத்தும் காணப்படுகின்றது. ஆனாலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது ஆதரவினை சுதந்திர கட்சிக்கும் வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. ஆனாலும் சரத்பொன்சேகாவால தம்முடைய் வாக்குவங்கி உடையலாம் என்று சுதந்திரக்கட்சியின் கருதுகின்றார்கள். இதனாலேயே சரத் பொன்சேகாவிற்கு எதிரான கருத்துக்களையும் சரத் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்ற கருத்தினையும் மக்கள் மத்தியில் பகிரங்கமாக சுதந்திரகட்சியின் பிரச்சார கூட்டங்களில் கூறிவருகின்றனர்.
தமிழ் கூட்டமைப்போ இது தொடர்பாக எந்த முடிவினையும் இதுவரைக்கு தெரிவிக்கவில்லை. சரத்பொன்சேகா இல்லாமல் வேறு ஒருவர் வேட்பாளராக நின்றிருந்தால் கூட்டமைப்பு தன்னுடைய ஆதரவினை ஐதேகவிற்கே வழங்கியிருக்கும் ஆனால் தற்போது அது முடியாத காரியம். மக்களுடைய முடிவு தெரியாமல் யாருக்கும் ஆதரவளக்கவில்லை தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பிற்பாடுடு அறிவிக்கின்றோம் எனமட்டுமே தற்போதைக்கு கூட்டமைப்பினரால் கூறமுடியும்.

தற்போது போட்டியிடும் பிரதான இருதரப்பினர்களிடம் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் காணப்படுகின்றது. அதேபோல சர்வதேச சமூகத்துக்கும்கூட இருக்கத்தான் செய்கின்றது. இந்த தேர்தலில் இந்தியாவும் மறைமுகமாக தற்போதைய ஜனாதிபதியே அடுத்த ஜனாதிபதியாகவும் வரவிரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் யாருக்கு என்பதை இன்னமும் சரியாக கணிப்பதற்கு சற்று சிக்கல் நிலையே காணப்படுகின்றது. யுத்தம் இலங்கையில் முடிவுற்ற நிலையிலே தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இரண்டாவது பதிவர் சந்திப்பு எனது பார்வை

கொழும்பு தமிழ் சங்கத்தில்இடம்பெற்ற 1வது பதிவர் சந்திப்புக்கு செல்லாததனால் எனக்கு இதுதான் முதலாவது பதிவர் சந்திப்பாக அமைந்தது. உண்மையிலே இந்த சந்திப்பானது மிகவும் ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பாகவே அமைந்ததென்று கூறலாம் எனென்றால் அங்கு கதைக்கப்பட்ட விடயங்கள்.
முதலில் கலந்துரையாடப்பட்ட பதிவு எழுதுதல் என்பது பற்றிய கலந்துரையாடல்கூட பதிவுகள் எப்படியிருக்கவேண்டும் தனித்துவங்கள் விருப்பங்கள்போன்றவற்றினை ஆழமாக அலசியிருந்தது. தூங்கியவர்களை எழுப்புவதுபோல அப்பப்போ புல்லட் அடித்த லூட்டிகளுக்கும் அளவில்லை. அதற்கு பிறகு பதிவர் லோஷன் தனது கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதேபோலத்தான் பெண்களும் வலையுலகமும் அனானிகள் போன்ற தலைப்புக்களை விவாதிக்கவும் பல தகவல்களை அவற்றின்மூலம் பெறவும் கூடியதாக இருந்தது.
அதேபோல மது தனது பாணியில் கூகிளில் ஆரம்பித்திருக்கும் இலங்கை தமிழ் பதிவர்கள் என்கின்ற குழுமத்தினை எவ்வாறு உபயோகப்படுத்துவது போன்ற பல தொழில்நுட்ப விடயங்களை கூறியது மிகவும் பயனுள்ளதாவே அமைந்திருந்தது. அதேபோல் மாதத்திற்கு ஒருமுறை குழுமத்திலே குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுகூடி கதைப்பது என்ற கருத்து மிகவும் வரவேற்கப்படக்கூடிய ஒன்று.
இறுதியாக ஏற்பாட்டுகுழுவினர் ஏற்பாடு செய்திருந்த இருவிளையாட்டுகளில் நாம் பங்குபற்றினோம் ஓன்றில்கூட வெற்றிபெற முடியவில்லை.
ஆகமொத்தத்தில் இரண்டாவது பதிவர் சந்திப்பானது மிகவும் ஒரு காத்திரமான சந்திப்பாகவும் அதேவேளையில் வெற்றிகரமான சந்திப்பாகவே நிறைவு பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு பல பதிவர்களுடன் அளவளவான ஒரு அருமையான சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்ததென்றுதான் நான்கூறவேண்டும்.
அடுத்த சந்திப்பு எப்போது?

11 டிசம்பர் 2009

இங்கையும் வேட்டைக்காரனா (என்ன கொடுமை இது....)

இது எனக்கு வந்த பேஸ்புக் மெசேஜ்


வேட்டைக்காரன் படத்தை ஓட்டுவதற்கு பயபுள்ளைங்க ரொம்ப றிஸ்க் எடுக்கீனம்போல
படத்தை சொடுக்கி பெருசாக பார்க்கலாம்

05 நவம்பர் 2009

கண்ணகிபுரம் எங்கே இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா..."

யா ரிவி
நிறுவனம் தயாரித்து ஆகஸ்ட் 5ம் திகதிமுதல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சகல தமிழ் மற்றும் சிங்கள அலைவரிசைகளிலும் புதன் மற்று வெள்ளி ஆகிய தினங்களில் மாலை 6.45 மணிக்கு ஒலிபரப்பப்படும் வானொலி நாடகம்தான் “கண்ணகிபுரம்”.


19 முதல் 29 வரையான கிரமங்களில் உள்ள இளையோர்களையும் நகர்புறங்களை அடுத்துள்ள இளையோர்களை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் இந்த நாடகம் கற்பனையில் உருவாக்கப்பட்ட கண்ணகிபுரம் என்ற கிராமத்தை மையமாக வைத்தே தயாரிக்கப்படுகின்றது. கண்ணகிபுரம் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரசியமான முறையில் 15 நிமிடங்களை கொண்ட வானொலி நாடகமாக தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றது.

இந்த நாடகத்தொடரை குறிக்கும் விதமாக கண்ணகிபுரம் என்ற இருமொழிப்பாடலொன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றது. அத்தடன் ஒவ்வொரு நாடகத்தின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலினை குறுஞ்செய்தியூடாக அனுப்பும் 5 அதிஷ்டசாலிகளுக்கு யா ரிவி நிறுவனம் பெறுமதியான பரிசுகளையும் வழங்கி வருகின்றது.
பாடலினை கேட்க

ஒலிபரப்பாகும் அலைவரிசைகள் : - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய, வர்த்தக சேவைகளிலும் பிராந்திய ஒலிபரப்புச் சேவைகளான சிற்றி எப்.எம்., ரஜரட்ட எப்.எம்., கந்துரட்ட எப்.எம்., வயம்பஹன்ட, கொத்மலை எப்.எம்.,
தென்றல் எப்.எம்., பிறை எப்.எம்., மற்றும் யாழ். எப்.எம்

தென்றலில் மாலை 5.45 மணிக்கு இந்நாடகம் ஒலிபரப்பாகும்

மேலதிக மற்றும் பரிசு விபரங்களுக்கு -
இங்கே அழுத்துங்கள்

தயாரிப்பு - Video