தலைப்பை பார்த்தவுடனேயே ஏதோ அரசியல் பதிவு என்று நினைக்கவேண்டாம். இது இயற்கையுடன் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு. அதாவது தற்போது புவியானது நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகின்றது. இதற்கு முக்கியமான காரணமாக மனிதனது செயற்பாடுகளை கூறலாம். அதிகரித்து வரும் நகர மயமாக்கல் இதற்கு முக்கியமான காரணமாகும்.
காலநிலை மாற்றத்தைால் எரிர்காலத்தில் புவியானது பாரிய சவால்களை சந்திக்க வேண்டி வரும். எனவே எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு தற்போதே சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும். அதற்கு புவியில் உள்ள ஒவ்வொருவருடைய பங்களிப்பும் முக்கியம் .
இயற்கையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு www.earthlanka.net எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது. தற்போது கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் EDEX 2010 கண்காட்சியில் Earthlanka தனது கண்காட்சி கூடத்தினை Green Zone ல் நிறுவியிருக்கின்றது. நீங்களும் EDEX 2010 கண்காட்சிக்கு சென்றால் ஏர்த்லங்காவின் Green Alliance கண்காட்சி கூடத்திற்கு சென்று மேலதிக விபரங்களை பெற்று கொள்ளலாம்.
உங்களது கருத்துக்களை அவர்களுடைய கீழ்வரும் வலைப்பதிவிற்கு சென்று பதியலாம். உங்களுடை பெறுமதியான கருத்துக்கள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றகண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பிவைக்கப்படும்.
வலைப்பதிவு இங்கே அழுத்தவும்
www.earthlanka.com
Join Earthlanka Fan Club on Facebook "One Earth" Click Here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக