தலைப்பை பார்த்தவுடனே பல அன்பு உள்ளங்களுக்கு(எப்புடியெல்லாம் ஐஸ் வைக்கவேண்டியிருக்கு) என்ன சொல்லவாறன் என்பது விளங்கியிருக்கும். பதிவே போடுறதில்லை என்று ஒரு குறிக்கோளேட இருந்தவனை கடைசியில விளக்கப்பதிவு எழுத வைச்சிட்டிங்களே.
அண்மையில் மன்மதன் அம்பு திரைப்படம் பார்த்தேன் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய சவாலான விடயமான சந்தேகத்தினை கையில் எடுத்திருக்கின்றார் கமல்.
படத்தின் கதை - நான் சொல்லப்போறதில்லை போய் தியட்டுரில பாருங்கோ
நடிப்பு -
கமல் - ம்..ம்... நடிப்பு என்றாலே கமல் என்று ஒரு வரலாறே இருக்கு. கமலினுடைய நடிப்பைபற்றி நான்சொல்லித்தான் தெரியோணுமாக்கும்
மாதவன் - பட்டையை கிளப்பியிருக்கிறாரு மாதவன்
த்ரிஷா - பொண்ணு சும்மா அந்தமாதிரி நடிச்சிருக்கு. பின்ன கமல்படத்தில நடிக்க வந்துட்டு குருவி திருப்பாச்சி இதுபோன்ற படத்தில நடிச்சமாதிரி
நடிக்கமுடியுமே
சங்கீதா - அம்மணி கலக்கியிருக்கிறா அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னிட்டீங்க போங்க
ஏனையவர்களும் நன்றாக நடித்திருக்கின்றார்கள் குறிப்பாக ரமேஷ் அர்விந், சங்கீதாவின் மகனாகவரும் அந்த சுட்டி பையன், குஞ்சு குறூப்
இசை - நீலவானம் பாடல் மற்றும் பின்ணணி இசையில் கலக்கியிருக்கின்றார் தேவி ஶ்ரீ பிரசாத் என்பதைவிட கமல் DSPயை நன்றாக வேலைவாங்கியிருக்கின்றார் என்று சொல்லவேண்டும்
படத்தொகுப்பு - நீலவானம் பாடல் தொகுப்பு செய்யப்பட்ட விதம் அருமை. அத்துடன் படத்தொகுப்பும் அருமையாக இருக்கின்றது. ஷான் முஹம்தம் என்ற புதியவர்தான் படத்தொகுப்பு. முதல்படத்திலேயே நன்றாக வேலைசெய்திக்கின்றார்
இயக்கம் - கே.எஸ். இரவிக்குமார் தனது பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கின்றார் ஆனாலும் படத்தின் பெரும்பாலான பகுதியில் கமலே
தனித்துவமாக தெரிகின்றார்
மொத்தத்தில் ஒரு கமலுடைய இரசிகனாக எனக்கு படம் திருப்தி அம்புட்டுத்தானுங்கோ...
இதை விமர்சனம் எண்டு நீங்க நினைச்சால்அதுக்கு கம்பனி பொறுப்பாகாது
எனக்கு பிடித்த கமலின் 10 படங்கள் (விளக்கங்களை பின்பு ஒரு பதிவில் விளக்கமாக தருகிறேன்)
1. 16 வயதினிலே
2.சலங்கைஒலி
3.குணா
4.நாயகன்
5.மூன்றாம்பிறை
6.குருதிப்புனல்
7. இந்தியன்
8.விருமாண்டி
9.அன்பேசிவம்
10.தசாவதாரம்