எதிர்வரும் வாரம் முதல் இலங்கையின் திரையரங்குகளில் “சித்தார்த்த” என்ற சிங்களப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. யார் இந்த கௌதம சித்தார்த்த என்றால் கி.மு 500ம் ஆண்டுகளில் நேபளத்தின் லும்பினி எனுமிடத்தையாண்ட அரசனின் புத்திரன். தன்னுடைய வாழ்க்கையில் பெறக்கூடிய அதியுச்ச இன்பங்களையெல்லாம் உட்சபட்சமாக அனுபவித்த அரசிளங்குமாரன். அதன் பின்னரே அவனுக்கு ஆசைகளின் மேல் வெறுப்பு ஏற்பட்டு அரண்மனை சொகுசு வாழ்க்கையினைவிட்டு வெளியேறி துறவு பூண்டு அரசமரத்தின் கீழ் ஞானம் அடைந்து கௌதம புத்தரானவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. இது தொடர்பான தகவல்களை http://ta.wikipedia.org/s/58x இந்த விக்கிபீடியா முகவரியில் விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சித்தார்த்தரை பற்றிய திரைப்படமே வெளிவரவிருக்கின்றது. இது தொடர்பாக இந்த திரைப்படத்தினுடைய இயக்குனர் அண்மையில் ஊடகமொன்றுக்கு பேட்டிகொடுத்திருந்தார். அதில் அவர் இந்த சித்தார்த்த திரைப்படத்தினுடைய கதையினை இந்தியாவில் இருக்கின்ற ஒரு இயக்குனரிடம் காட்டியதாகவும் அதற்கு அவர் இதை நல்ல ஒரு திரைக்கதை எழுத்தாளரிடம் கொடுத்த எழுதும்படியும் கூறியிருக்கின்றார். அதன்பிரகாரம் பொலிவூட் திரைக்கதை எழுத்தாளரினைக் கொண்டு சித்தார்த்த திரைக்கதை எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்த எழுத்தாளர் எழுதிய திரைக்கதை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறி மீண்டும் திரைக்கதையினை இயக்குனரும் அவருடைய குழுவினரும் இங்கேயே எழுதி அதனையே படமாக்கியிருக்கின்றார்கள்.
உண்மையில் அந்த பொலிவூட் எழுத்தாளர் எழுதிய திரைக்கதை உண்மையில் சித்தார்த்தருடைய வாழ்க்கையினை சரியான முறையில் சொல்லியிருந்திருக்க வேண்டும். ஆனால் அது இவர்களுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனென்றால் இலங்கையை பொறுத்தளவில் பிறந்த நாளிலிருந்தே புத்தர் ஞானமடைந்தவர் என்பதாகவே இலங்கை பௌத்தர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே “சித்தார்த்த” திரைப்படத்தினுடைய கதை நிற்சயமாக இலங்கையில் வாழுகின்ற பௌத்தர்களை திருப்பத்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை இயக்குனரின் பேட்டியிலிருந்து ஊகிக்கலாம். அதுமட்டுமல்லாது இந்த திரைப்படத்தினை 30ஆயிரம் பௌத்த துறவிகளுக்கு இலவசமாக திரையிட்டுக் காட்டப்போகின்றார்களாம். ஆகவே 30 ஆயிரம் பௌத்த துறவிகளும் 30 ஆயிரம் விகாரைகளில் இதைப்பற்றி சொன்னார்களானால் படம் நிற்சயம் இலங்கையில் சுப்பஹிட்ஸ் ஆகிவிடும். அடுத்த 3 மாதத்திற்கு இலங்கையின் திரையரங்குகளில் “சித்தார்த்த” தான்.