ஆரம்பத்தில் நான் யார் என்று தேட ஆரம்பித்தபோது என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிப்பது சமூகம் என்ற ஒரு மாயை என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. நான் யார் என்பதை தீர்மனிக்கும் புள்ளி எனக்குள் இல்லாமல் எனக்கு வெளியே இருப்பதை உணர்ந்தபோது அதனுளிலிருந்து வெளியேறவேண்டும் என்ற ஒரு உத்வேகம் என்னுள் ஏற்படுகின்றது. ஆனாலும் இந்த சமூகம் என்னை ஒரேயடியாக அவ்வளவு இலகுவில் வெளிவர அனுமதி மறுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் என்னுடைய தெரிவுகளை வலுக்கட்டாயமாக இந்த சமூகம் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாயையிலிருந்து வெளிவரும்போது "நான்" என்பதற்கான அர்த்தத்தினை தேடி இலகுவில் பயணிக்கலாம் என்று புலப்படுகின்றது.
தேடல் பயணம் தொடரும்...