A Promised Land

வடக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வடக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 டிசம்பர் 2010

விடைபெறும் 2010ம் எதிர்பார்ப்புக்களுடன் 2011ம்


2010ம் ஆண்டின் இறுதி மணித்துளிகளில் இந்த பதிவினை எழுதுகிறேன். இதுவே இந்த ஆண்டின் என் இறுதிப் பதிவாகவும் இருக்கப்போகின்றது.
2010ம் ஆண்டு பலருக்கு நன்மையான ஆண்டாகவும் இன்னும் பலருக்கு கசப்பானதாகவும் இருந்திருக்கும் எல்லாம் நன்மைக்காகவே என்று எடுத்துக்கொண்ள்ளுங்கள் நண்பர்களே...

பதிவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லதொரு ஆண்டாக அமைந்திருக்கின்றது. அதாவது 2010ம் ஆண்டின் இறுதிப்பகுதி மிகமகிழ்ச்சியானதாக அமைந்திருக்கும் எனக்கும் அப்படித்தான். பதிவர்கள் சந்திப்பின் மூலம் பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். தொய்ந்திருந்த இலங்கை வலையுலகத்தினை வேகம் எடுக்கவைத்திருக்கின்றது இந்த இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு. இந்த வேகம் உற்சாகம் 2011ம் ஆண்டிலும் தொடரவேண்டும் என்பதே எனது அவாவாக இருக்கின்றது. அத்துடன் பதிவர்களுக்கு இடையில் மேலும் புரிந்துணர்வுகள் 2011ம் ஆண்டில் வளரவேண்டும்.

இன்னுமொன்றையும் சொல்லவேண்டும் அதாவது இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கோ மிகுந்த சோதனைகள் மிகுந்த ஆண்டாக 2010 ஆகிவிட்டது குறிப்பாக 2010 ன் இறுதி பகுதியை சொல்லலாம் கடும் மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளஅபாயமும் அவர்களுடைய மனங்களை அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையினை மேலும் வடக்கு கிழக்கில் மோசமாக பாதித்துவிட்டது என்று கூறலாம் 2011ம் ஆண்டிலாவது அம்மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்பதுதான் என்னுடையதும் இன்னும் பலருடையதுமான எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

முடிவு என்பது இன்னொன்றின் ஆரம்பமே அந்தவகையில் 2010ம் ஆண்டு விடைபெறுவதென்பது 2011ம் ஆண்டின் ஆரம்பத்துக்காகவே. அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு 2011ம் ஆண்டு எல்லோருக்கும் சிறந்த ஒரு ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு 2011 ம் ஆண்டு சந்திப்போமா நண்பர்களே!