நடிகர் விக்ரம்!, தன்னுடைய அபரிமிதமான அர்ப்பணிப்பான நடிப்பால் தமிழ் சினிமா இரசிகர்களை மட்டுமல்லாது உலக சினிமா இரசிகர்களையும் கவர்ந்தவர். ரசியில்லா நடிகர் என தமிழ் சினிமா ஓரங்கட்டியபோது அது தவறு என கண்முன் நிரூபித்துக் காட்டிய ஒரு கலைஞன். இயக்குனர் பாலாவால் சேது படத்தின் மூலம் செதுக்கப்பட்ட முத்து. வலகது கை செய்வதை இடது கை அறியாமல் இருக்கட்டும் என்று ஒரு பண்டையகூற்று எம்மத்தியில் இருக்கின்றது. அதற்கேற்றது போலவே சத்தமில்லாமல் பலருக்கு உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் ஒரு நல்ல மனிதன். நடிகர் கமலஹாசனுக்கு பின்னர் நான் விரும்பும் நடிகன். இப்படி நான் இரசிக்கும் நடிகர் விக்ரமைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
நேற்று (ஏப்ரல் 17) விக்ரமின் பிறந்தநாள்.
விக்ரம் என்றவுடன் எனக்கு உடனேயே ஞாபகம் வருவது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் இயக்குனர் பாலாவின் "இவன் தான் பாலா" புத்தகத்தில் விகரம் தொடர்பில் இயக்குனர் பாலா சிலாகித்து எழுதியிருக்கும் குறிப்புக்கள்தான் காலத்தால் அழியதவை.
பாலா தனது சேது படத்தின் படப்பிடிப்பு சினிமா தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் நின்று போனதால் மனமுடைந்து போயிருந்த நேரத்தில் தன் பிரச்னையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத விக்ரம் ஒருநாள் பாலவிடம் வந்து ‘‘வீட்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு பாலா. ராதிகா ஒரு டெலிஃபிலிம் பண்ணக் கூப்பிடறாங்க. போனா, கொஞ்சம் பைசா கிடைக்கும்!’’ என்று கேட்கவும் அதில் நடிப்பதற்கு உடனேயே விக்ரமை பாலா அனுப்பி வைத்திருக்கிறார். விக்ரம் அந்த டெலிஃபிலிம் முடித்துவிட்டு திரும்பி வந்தபோது சம்பளமாக கிடைத்த அறுபதாயிரம் ரூபாவையும் கொண்டுவந்து ‘‘பாலா, நீங்களும் பணத்துக்கு சிரமப்படறீங்கதானே. அறுபதாயிரம் ரூபா குடுத்தாங்க. இதுல எனக்கு பாதி, உங்களுக்குப் பாதி’’ என வலுக்கட்டாயமாக பாலவின் கையில் திணித்துவிட்டுப் போயிருக்கிறார்.

தன்னுடைய கஸ்டத்திலும் மற்றவருடைய கஸ்டத்தையும் புரிந்துகொண்டு உதவி செய்த நல்ல மனம் கொண்ட விக்ரம் இன்று இந்தளவு தூரம் உயர்ந்திருப்பது அவரது மனிதத்தன்மைக்கு இயற்கை கொடுத்த பரிசே!
மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்!
பிதாமகன் விக்ரமுடன் இயக்குனர் பாலா |