A Promised Land
31 மே 2010
அங்காடித்தெருவும் பதிவுலக விருதுகளும் - சே! வடைபோச்சே
வெளிவந்து பலநாட்களாகியும் எனக்கு பார்ப்பதற்கு நேற்றுவரையும் சந்தர்ப்பம் இல்லாதுபோன திரைப்படம்தான் அங்காடித்தெரு. மிக இயல்பான பல விடயங்களை ஆழமாக கூறும் ஒரு திரைப்படம்தான் இது.பார்த்தவுடன் பிடித்துப்போய்விட்ட நல்ல ஒரு சினிமாவை எங்களுடைய கண்முன்நிறுத்திய பட இயக்குனர் வசந்தபாலனுக்கு பாராட்டுகள்.இப்படத்தில் நடித்த நடிகர்களுடைய இயல்பான நடிப்பு, இசை போன்றவற்றை இரசிக்கலாம். படம்வெளிவந்து இவ்வளவு நாட்களுக்கு பின் அதைப்பற்றி விமர்சனம் எழுதுவது எனக்கு சரியாக படவில்லை. ஆனாலும் எனக்கு வடைபோச்சே...ஏனென்று கேட்கிறீர்களா?
பதிவர் சதீஷ் மற்றும் பலரும் தற்போது இணையத்தில் ஆரம்பித்த முயற்சிதான் திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் - 2010. மிகவும் பாரிய விளம்பரங்களுடன் பதிவர்களால் நடத்தப்பட்டுவரும் இவ்விருது வழங்கும் முயற்சிபாராட்டத்தக்க விடயம்தான். அதில் சிறந்த திரைப்படத்திற்கு வாக்களித்தவிட்டுதான் அங்காடித்தெருவை பார்த்தேன். மனது கனத்துவிட்டது. அட இந்தப்படத்திற்கு வாக்கிளிக்க முடியாமல் போய்விட்டதென்று.ம்...பார்ப்போம் இன்னும் 3வாரங்கள் இருப்பாதாக கூறுகின்றார்கள். நண்பர்கள், ஓட்டுப்போடுபவர்கள் இந்தப்படத்திற்கு எப்படியும் அமோக ஆதரவினை வழங்குவார்கள் என நான் நம்புகின்றேன். உங்களுடைய பொன்னான வாக்குகளையும் நீங்களும் அளிக்கலாம்...நீங்களும் வாக்களிக்க இங்கே கிளிக்குங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
9 கருத்துகள்:
வடை போகாது.... :))))
ஹி ஹி...
பார்ப்போம்....
ம் பார்ப்போம்..பார்ப்போம்...
ஒரு கல்லில் இரண்டு மாங்காயா? வாழ்த்துக்கள் நன்றிகள் அடேய் கான்கொன் அதெப்படி சொல்வாய் வடை போகாதேன்று..........இது சரி வராது......
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கள்ளவோட்டு ஏதாவது போட ஐடியாவோ...
"இங்கே கிளிக்குங்கள்".........
கிளிக்குங்கள் என்பது தமிழ் சொல்லா?
நாங்க இருக்கும் போது வடை போகாது.. ஆனால் சதீசை நம்ப முடியாது.. ;)
காகா வடை கதை போலாகிவிடும்.. ;)
//gevinbaggy கூறியது...
"இங்கே கிளிக்குங்கள்".........
கிளிக்குங்கள் என்பது தமிழ் சொல்லா?
//
இல்லை அது தமிழ் சொல் அல்ல.. :)
நன்றி லோஷன் அண்ணா...வடை போகாது என்றுதான் நாங்களும் நம்புறம்...
//ஆனால் சதீசை நம்ப முடியாது.. ;)//
ஆகா இடக்கு முடக்கா எதையும் செய்யுறதுக்கு முன்னம் வாக்களிப்பு தொடர்பாக கண்ணாகிப்பதற்கு சுயாதீன கண்காணிப்பு குழு ஒன்றை நியமிக்கும்படி கோரிக்கை விடுகிறேன்...
//gevinbaggy கூறியது...
"இங்கே கிளிக்குங்கள்".........
கிளிக்குங்கள் என்பது தமிழ் சொல்லா?
கிளிக்குங்கள் என்பது தமிழ் அல்ல நண்பரே
நீங்கள் இருக்கும் போது மட்டும் இல்லை என் மனசாட்சிக்கு எதிராகவும் ஒன்றும் பண்ண முடியாது. இதுவரைக்கும் எனக்கு வாக்களிப்பில் எந்த குறையும் தெரியவில்லை. அப்படி தவறு நடப்பதாக உணர்ந்தால் உடனே அந்த வகையை முடக்கக் கூட நான் முடிவெடுத்துள்ளேன். மீண்டும் சொல்கின்றேன் இங்கே தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடமில்லை.
`ஹா...`ஹா...எநிங்கள் அப்படி செய்யமாட்டீர்கள் என்ற எங்களுக்க தெரியம் சதீஷ்...
கருத்துரையிடுக