A Promised Land

10 நவம்பர் 2008

சேவல் விமர்சனம்


பொறுப்பில்லாமல் திரிகிற ஒரு சேவல். அதன் பாதையில் குறுக்கிடுகிற அழகான கோழி. இவற்றின் மேலே வட்டமடிக்கிற சில கள்ளப்பருந்துகள். விடலை சேட்டைகளை மூட்டை கட்டிவிட்டு, ஆக்ஷன் `கொக்கரக்கோ'வில் சேவல் இறங்குவதுதான் கதை.

பரத்துக்கு ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடிக்கிற சேவல் கேரக்டர். பேச்சில் திருநெல்வேலி. இடுப்பில் சற்று தூக்கிக் கட்டிய வேட்டி. கையில் அவசரத் தாக்குதலுக்கு பேனா சைஸ் கத்தி. கிராமத்து சல்லித்தனம் பண்ணுகிற இளைஞனாக டென்ஷனே இல்லாமல் பரத் நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார்.

அக்ரஹாரத்துக் காதலியாக வருகிற பூனம் டபுள் ஓ.கே.! ஆரம்பத்தில் பரத்திடமிருந்து விலகிச் செல்வதும், மெல்ல மெல்ல காதலில் விழுவதும், வக்கிர வில்லன்களிடம் சிக்கிக்கொண்டு அவஸ்தைப் படுவதும் படு யதார்த்தம். பூ கட்டும் பையனுக்கும், பிராமணப் பெண்ணுக்கும் இடையே பூக்கிற காதலுக்கு கச்சிதமான லாஜிக் வைத்திருப்பது இதம். டைரக்டர் ஹரி இன்னும் எத்தனை முறை ஹீரோயினை ஸ்கூல் யூனிஃபார்மில் ஆட விடுவாரோ? ஹீரோயின் ஏறி மிதித்தால், சுளுக்கு குணமாகுமாம். எப்படித்தான் ஐடியா பிடிக்குறாங்களோ. படத்தின் முன்பாதியில் சிம்ரனைக் கொஞ்சம் கலகலக்க வைத்துவிட்டு, பின்பாதியில் திடுதிப்பென சோகச் சித்திரமாக்கிவிட்டார்கள். அநியாயம்! கர்ப்பிணியான சிம்ரன் புற்றுநோய்க்குள்ளாகி இருப்பது வளைகாப்பில் தெரிய வருவதும், தனது தங்கை பூனத்தை கணவனுக்கே இரண்டாம் மனைவி யாக்குவதும் `சுமைதாங்கி', `துலாபாரம்` வகையறாக்களை எல்லாம் மிஞ்சுகிற கண்ணீர்க் காட்சிகள்! ரணகளங்களுக்கு இடையே வடிவேலுவின் போஸ்ட்மேன் காமெடி ஜாலி ஒத்தடம்!

பூனத்தின் நடத்தையை சந்தேகப்படுகிற புகுந்த வீட்டு கோஷ்டி, க்ளைமாக்ஸில் அவரை மொட்டையடிப்பது தமிழ் சினிமாவில் பலமுறை அடி வாங்கிய சின்ந்தடிக் வில்லத்தனம். எடுத்ததுக்கும் தொடுத்ததுக்கெல்லாம் ஊர் மக்கள் சுப்ரீம் கோர்ட் மாதிரி வில்லன் சம்பத்குமாரின் வீட்டுக்குப் போய் நிற்கும்போது நமக்கு சலிப்பு வருகிறது. சின்னச் சின்ன குறைபாடுகளை `லைவ்' ஆன சிவசைலம் கிராமப் பின்னணியைக் காட்டி ஹரி சரிக்கட்டிவிடுகிறார். ஃபேமிலி சென்ட்டிமெண்ட் ஓவர் டோஸ் ஆகிப் போனதில் சேவல் கொஞ்சம் டி.வி. சீரியல் ஸ்டைலில் கூவியிருக்கிறது.

சேவல் -வெறும் கறிக்கோழி இல்லை!

நன்றி - குமுதம்

கருத்துகள் இல்லை: